Monday, December 2, 2013
Thursday, November 28, 2013
Thursday, November 21, 2013
Wednesday, October 30, 2013
"சிறு குழந்தைகளை என்னிடம் வர விடுங்கள்" - திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செயல்களில்
நம்பிக்கை ஆண்டை கொண்டாடும் விதமாக ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த கத்தோலிக்க குடும்பங்கள் மத்தியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வீற்றிருக்க, கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த சிறுவன் ஒருவன் திருத்தந்தையை உற்று நோக்கி அருகில் செல்கிறான்...
சுமார் 80 க்கு மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகளை சந்திக்க வரும்போது திருத்தந்தைக்கு தொந்தரவு செய்யாமல் இருக்க கார்டினல்கள் பலர் அந்த சிறுவனை அவன் இருப்பிடத்திற்கு அழைத்து செல்ல முற்பட.....
அந்த சிறுவன் இன்னமும் தொடர்கிறான் .....
திருத்தந்தை உரையாற்றும் போது இன்னமும் அங்கேயே இருந்து அங்கிருந்து போக மறுத்து அவருடைய காலை கட்டி பிடித்தபடி நிற்க....
அவர் அந்த சிறுவனை தன் இருக்கையில் அமர வைத்து பின் தனது உரையை தொடர்கிறார்.
ஞாயிறு திருப்பலிகளில், கோவிலுக்குள் சேட்டை செய்யும் சிறுவர்களை முறைப்பதும், ஒன்றும் அறியாமல் அழும் சிறு குழந்தைகளின் தாய்மார்களை வெளியே செல்ல அதட்டுவதுமாக இருக்கும் அருட்பணியாளர்களை மட்டுமே பார்த்து வந்த நமக்கு இது ஒரு அதிர்ச்சி மட்டுமல்ல மாறாக பேரதிர்ச்சியும் கூட....
இப்படி ஒரு திருத்தந்தை நமக்கு கிடைத்தது ஒரு வரபிரசாதம் எனலாம்.
ஒரே மரத்தில் 250 வகையான ஆப்பிள்கள்: ஜெர்மனியில் சாதனை
ஒரே மரத்தில் 250 வகையான ஆப்பிள்களை காய்க்க செய்யும் வினோத மரத்தை வளர்த்து, ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த தோட்டக்கலைஞர் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.
ஜெர்மனியின் West Sussex பகுதியில் உள்ள Chidham என்ற ஊரைச் சேர்ந்த Paul Barnett என்ற தோட்டக்கலைஞர், 250 வகையான ஆப்பிள்கள் காய்க்கும் வினோத மரம் ஒன்றை தனது தோட்டத்தில் வளர்த்துள்ளார்.
கடந்த 20 வருடங்களாக மிகவும் கவனத்தோடு பல்வேறு வகை ஆப்பிள் மரங்களின் ஒட்டு ரகங்களை வைத்து தனது ஆப்பிள் மரத்தை வளர்த்து வருவதாக Paul Barnett கூறியுள்ளார்.
தற்போது 20 அடி உயரம் வளர்ந்துள்ள இந்த ஆப்பிள் மரத்தில், சமையலுக்கு பயன்படும் Withington Fillbasketஎனப்படும் அமெரிக்க ஆப்பிள் முதல், 1908ம் ஆண்டைச் சேர்ந்த Eady’s Magnum போன்ற பல்வேறு வகைகளும் காய்ப்பதாக Paul Barnett பெருமையுடன் தெரிவித்துள்ளார்.
இவரது மரத்தில் காய்க்கும் ஆப்பிள்களை பொதுமக்கள் வந்து ஆர்வத்துடன் பார்த்து, வாங்கி, சுவைத்து நன்றாக இருப்பதாக பாராட்டுகின்றனர். இந்த மரம் தற்போது ஜெர்மனியில் புகழடைந்து வருகிறது.
காது கேளாதோர் தினம்
காது கேளாதோர் தினம்
ஒலியைக் கேட்பதில் சிரமம் ஏற்படுவதையே காது கேளாமை என்று சொல்கிறோம். உலக மக்கள் தொகையில் 5 விழுக்காட்டுக்கு அதிகமானோர், அதாவது ஏறக்குறைய 36 கோடிப் பேர் காது கேளாதவர்கள். இவர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் வளரும் நாடுகளில் உள்ளனர் எனவும், ஆரம்பத்திலே சிகிச்சை எடுத்துக்கொள்வதன்மூலம் இவர்களில் பாதிப்பேரைக் குணப்படுத்திவிடலாம் எனவும் உலக நலவாழ்வு நிறுவனம் கூறுகிறது. உலகில் ஏறக்குறைய 40 விழுக்காட்டினருக்குத் தங்களின் 65வது வயதில் காது கேளாமை பிரச்சனை ஏற்படுகிறது. மனிதரது காது, சாதாரணமாக 20 ஹெர்ட்ஸிலிருந்து 20 கிலோ ஹெர்ட்ஸ்வரை கேட்கும் திறன் பெற்றது. அதிக ஒலியைக் கேட்பதால்கூட கேட்கும் திறன் பாதிக்கப்படுகிறது. பெற்றோருக்கு இக்குறைபாடு இருப்பின்,குழந்தையையும் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. அடிக்கடி சளி அல்லது தொண்டைவலி ஏற்பட்டாலும் காது கேட்காமல் போகலாம். குழந்தைகளுக்கு காது கேளாமை இருந்தால் உடனே மருத்துவரிடம் சென்று பரிசோதிக்க வேண்டும். இல்லையெனில் இது குழந்தையின் பேச்சுத்திறனையும் பாதிக்கும். கைபேசியின் கதிர்வீச்சு காரணமாகக்கூட கேட்கும் திறன் பாதிப்படைகிறது. காதில் அழுக்கைச் சுத்தம் செய்கிறோம் என்ற பேரில் கண்ட கண்ட குச்சியைப் பயன்படுத்துவது, காதின் கேட்கும் திறனைப் பாதிக்கும்.
1951ம் ஆண்டு செப்டம்பரில், முதல் அனைத்துலக காது கேளாதோர் மாநாடு நடத்தப்பட்டது. 1958ம் ஆண்டில் அனைத்துலக காது கேளாதோர் தினம் தொடங்கப்பட்டது. பின் இது செப்டம்பர் கடைசி வாரம் காது கேளாதோர் வாரமாகவும், செப்டம்பர் கடைசி ஞாயிறு அனைத்துலக காது கேளாதோர் தினமாகவும் மாற்றப்பட்டது.
காது கேளாதோரிடம் பேசும்போது கவனிக்க வேண்டியவை.....
காது கேட்கவில்லை என்ற உணர்வை அவர்களுக்கு ஒருபோதும் ஏற்படுத்தக் கூடாது. “இதை அல்லது அதை எப்படிச் செய்தாய்” போன்ற வார்த்தைகளை அவர்களிடம் கேட்கக் கூடாது.
அவர்களுக்கு வணக்கம் சொல்லும்பொழுது கைகளைக் குலுக்காமல் மெதுவாக அணைத்துச் சொல்வது நல்லது.
நாம் உணருவதை அவர்கள் புரிந்துகொள்ளும் வகையில் சில அடிப்படையான சைகை மொழியைத் தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது.
காது கேளாதோர்க்கு சரிநிகர் மரியாதையும் மதிப்பும் கொடுக்க வேண்டும். மற்ற மக்கள் மத்தியில் அவர்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
ஒரே செடியில் தக்காளி, உருளைக் கிழங்கு, பிரிட்டன் நிறுவனம் சாதனை
ஒரே செடியில் தக்காளியும், உருளைக்கிழங்கும் விளையும் நவீன முறையைக் கண்டுபிடித்து பிரிட்டனை சேர்ந்த நிறுவனம் ஒன்று சாதனை படைத்துள்ளது.
பிரிட்டனைச் சேர்ந்த Thompson & Morgan என்ற நிறுவனம் வேளாண்மையில் புதுமைகளைப் புகுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக ஒரே செடியில் இரு வேறு காய்களை விளைவிக்கும் நவீன யுக்தியை இந்நிறுவனம் கையாண்டு அதில் வெற்றியும் பெற்றுள்ளது. அதன்படி உருளைக்கிழங்கையும், தக்காளியையும் ஒரே செடியில் விளைவித்து அறுவடையும் செய்துள்ளது.
இது குறித்துப் பேசிய அந்நிறுவன தலைவர் பவுல் ஹான்சர்டு (Paul Hansord) இரு வெவ்வேறு காய்கறிகளை ஒரே செடியில் விளைவிப்பது மிகவும் கடினமான காரியம் என்று கூறினார்.
மரபியல் மாற்றங்களைச் செய்து இதற்குமுன் இது போன்ற செயல்களில் அறிவியலாளர்கள் வெற்றி கண்டுள்ளனர், எனினும் அவ்வகையான மாற்றங்கள் செய்யாமல், இயற்கையான முறையில் இரு செடிகளை இணைத்து அவற்றில் விளையும் காய்கறிகளை, ஒரே செடியில் முதல் முறையாகத் தற்போது விளைவித்துள்ளோம் என்றும் ஹான்சர்டு கூறினார்.
இரு தாவரங்களின் திசுக்களையும் பிரித்து ஒரு குறிப்பிட்ட நிலைக்குப் பின் இரண்டும் ஒன்றாக ஒரே தொட்டியில் வளர்க்கப்பட்டன. அதன்பின் சரியான நேரத்தில் தக்காளிகள் காய்க்கத் துவங்கின, வேர்ப்பகுதியில் உருளைக்கிழங்கும் முளைத்திருந்தது. சோதனை முறையில் மட்டுமின்றி வியாபார ரீதியாகவும் இந்த முயற்சி வெற்றி பெற்றுள்ளது.
இதில் விளையும் காய்கறிகள் மிகுந்த சுவையுடன் இருப்பதால் மக்கள் விரும்பி வாங்கிச் செல்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
பிரிட்டனில் கண்டறியப்பட்ட இந்த முறையை தற்போது நியூசிலாந்து விவசாயிகளும் பின்பற்றத் தொடங்கியுள்ளனர்.
Thursday, October 24, 2013
காப்புக்காடு அருகே வாகனம் மோதி முதியவர் பலி
காப்புக்காடு அருகே மட்டுபாவு ஜங்ஷன்-ல் இருசக்கர வாகனம் மோதி முதியவர் ஒருவர் பலியானர். விபத்து நடந்த நேரம்: 24/10/2013 9.30 PM
Thursday, September 26, 2013
ஜப்பான் மக்களைப்பற்றி...
ஜப்பான் மக்கள் என்று சொன்னதும் மனதில் அவர்களைக் குறித்த ஒரு மரியாதை உருவாகிறது. இதற்குக் காரணம்... நிலநடுக்கம், சுனாமி, எரிமலை வெடிப்பு போன்ற இயற்கையின் விளைவுகளைச் சந்திக்கும்போதும்,அணுகுண்டு போன்ற மனித எதிர்ப்புக்களைச் சந்திக்கும்போதும் இவர்கள் காட்டும் கட்டுப்பாடும், ஒழுங்கும் நம்மைப் பிரமிக்க வைக்கின்றன.
ஜப்பான் மக்கள் என்றதும் அடுத்து நம் கவனத்தை ஈர்ப்பது அந்நாட்டிலுள்ள வயது முதிர்ந்தோரின் எண்ணிக்கை. அந்நாட்டின் மக்கள் தொகையில் வயது முதிர்ந்தோரின் எண்ணிக்கை 21 விழுக்காட்டிற்கும் அதிகம். வயது முதிர்ந்தோர் எண்ணிக்கை விழுக்காட்டில் ஜப்பான் உலக நாடுகளில் முதலிடம் வகிக்கிறது.
தற்போது ஜப்பானில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து, வயது முதிர்ந்தோரின் எண்ணிக்கை கூடிவரும் நிலை காணப்படுகிறது. இதே நிலை தொடர்ந்து நீடித்தால், 2050ம் ஆண்டுக்குள் ஜப்பானில் வயது முதிர்ந்தோர் எண்ணிக்கை, நாட்டு மக்கள் தொகையில் 40.5 விழுக்காடாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அமெரிக்காவில் வாழும் மக்களின் சராசரி வாழ்நாள் அளவுடன் ஒப்பிட்டால், ஜப்பான் மக்களின் வாழ்நாள், பொதுவாக 4 ஆண்டுகள் கூடுதலாக உள்ளது.
ஜப்பான் மக்களிடையே ஏறத்தாழ 100 விழுக்காட்டினர் எழுத, படிக்கத் தெரிந்தவர்கள். இந்நாட்டில் 4 விழுக்காட்டிற்கும் குறைவானவர்களே வேலையற்றோர் எண்ணிக்கையில் உள்ளனர்.
ஜப்பானில் உள்ள பல தொழிற்சாலைகளில் காலையில் தொழிலாளிகள் வந்து சேர்ந்ததும், அவர்களுக்கு உடற்பயிற்சிகள் நேரம் ஒதுக்கப்படுகிறது. இவர்கள் செய்யும் உடற்பயிற்சிகளில் மனதை ஒருநிலைப்படுத்தும் பயிற்சிகளும் இணைந்து செய்யப்படுகின்றன.
இணையத்தில், மகிழ்வைவிட கோபம் தான் மிக வேகமாகப் பரவும் மனித உணர்வு - சீன ஆய்வு
உலகை ஒன்றாக இணைத்திருப்பதன் மூலம் தகவல் தொழில்நுட்பப் புரட்சியை ஏற்படுத்தியிருக்கும் இணையத்தில், கோபம் தான் மிக வேகமாகப் பரவும் மனித உணர்வு என்று சீனாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
மனிதர்கள் வாழ்வுடன் வெகுவாக ஒன்றிப்போயிருக்கும் ஒரு சமூக இணையதளம் Twitter. குறிப்பிட்ட ஒரு விடயத்தைப் பற்றி, மக்கள் தூண்டப்பட்டதும், தமது கருத்துக்களை அவர்கள் Twitter வழியே பதிந்து விடுகிறார்கள்.
ஒரு குறிப்பிட்ட விவகாரம் குறித்து பொதுமக்கள் என்ன நினைக்கிறார்கள், அவர்கள் மத்தியில் என்ன கருத்துகள் நிலவுகின்றன என்பதை அறிய விரும்பும் ஆய்வாளர்கள், முதலில் நாடுவது Twitter போன்ற இணையதளங்களைத்தான்.
இப்படிபட்ட சமூக இணையதளங்களில் ஒன்று, சீனாவில் அதிகம் பயன்படுத்தப்படும் Weibo. Twitterக்கு இணையான Weiboவை சீனாவில் 50 கோடி மக்கள் பயன்படுத்துகிறார்கள்.
10 கோடி கருத்துகள் தினமும் பதிவாகும் Weibo இணையதளம் பற்றி, தலைநகர் Beijingகிலுள்ள Beihangபல்கலைகழகம் நடத்திய ஆய்வில் சில சுவையான தகவல்கள் வெளியாகியுள்ளன.
Weibo பயனீட்டாளர்களின் சொற்பிரயோகம், உணர்வுகளை வெளிப்படுத்தும் emoticon எனப்படும் அடையாளப் பயன்பாடு ஆகியவற்றை ஆய்வு செய்தவர்கள், கோபம், சோகம், மகிழ்வு, விரக்தி ஆகிய உணர்வுகளில்,கோபமூட்டும் பதிவுகளே மக்கள் மத்தியில் அதிக அளவில் பகிர்ந்து கொள்ளப்பட்டதைக் கண்டறிந்தனர்.
2010ம் ஆண்டில் ஆறு மாத காலம் சுமார் இரண்டு இலட்சம் Weibo பயனீட்டாளர்களின் ஏழு கோடி பதிவுகள் ஆய்வுசெய்யப்பட்டு இந்த முடிவுகள் வெளியிடப்பட்டன.
Wednesday, September 18, 2013
தொல்காப்பியர் சாலை, காப்புக்காடு
காப்புக்காடு கல்லறை தோட்டத்திலிருந்து நீரூற்று வரை புதிதாக அமைக்கப்பட்ட சாலைக்கு தொல்காப்பியர் சாலை என்று பெயரிட நல்லூர் பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவற்றியதற்கு நன்றி தெரிவித்து தொல்காப்பியர் கழகம் சார்பில் சால்வை அணிவிக்கப்பட்டது.
தொல்காப்பியர் கழகம் சார்பில் தலைவர் முளங்குழி பா. லாசர் அவர்கள் நல்லூர் பேரூராட்சி தலைவர் திரு கே செல்வராஜ் அவர்களுக்கு சால்வை அணிவித்தார்
தொல்காப்பியர் கழகம் சார்பில் தலைவர் முளங்குழி பா. லாசர் அவர்கள் 6 வது வார்டு உறுப்பினர் திரு. கிறிஸ்டோபர் அவர்களுக்கு சால்வை அணிவித்தார்
நல்லூர் பேரூராட்சி தலைவர் அவர்கள் தொல்காப்பியர் சாலை என்று பெயரிட்ட தீர்மான நகலை தொல்காப்பியர் கழக நிர்வாகிகளுக்கு வழங்குகிறார்
தொல்காப்பியர் கழகம் சார்பில் தலைவர் முளங்குழி பா. லாசர் அவர்கள் 6 வது வார்டு உறுப்பினர் திரு. கிறிஸ்டோபர் அவர்களுக்கு சால்வை அணிவித்தார்
நல்லூர் பேரூராட்சி தலைவர் அவர்கள் தொல்காப்பியர் சாலை என்று பெயரிட்ட தீர்மான நகலை தொல்காப்பியர் கழக நிர்வாகிகளுக்கு வழங்குகிறார்
தொல்காப்பியர் சாலை என்று பெயரிட நல்லூர் பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம்
தொல்காப்பியர் கழகம் சார்பில் தலைவர் முளங்குழி பா. லாசர் அவர்கள் நல்லூர் பேரூராட்சி செயல் அலுவலருக்கு சால்வை அணிவித்தார்
தொல்காப்பியர் கழகம் சார்பில் நல்லூர் பேரூராட்சி செயல் அலுவலருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது
Sunday, August 18, 2013
Saturday, August 10, 2013
குமரியில் கல்வி கட்டண கொள்ளை
நீங்க எவ்வளவு பணம் கட்டினீங்க? சரி பாத்துக்குங்க!!
Bethany Navajeevan Matriculation School, Vencode
Bethlahem Matriculation School, Karungal
Child Jesus Matriculation School, Unnamalaikadai
Christuraja Matriculation School, Marthandam
Good Shepered Matriculation School, Marthandam
Hindu Vidyalaya Matriculation School, Marthandam
Kids Oxford Matriculation School, Kuzhithurai
Vidya Jothi Matriculation School, Marthandam
Sri Vigneswara Matriculation School, Kappukad
Bethany Navajeevan Matriculation School, Vencode
Bethlahem Matriculation School, Karungal
Child Jesus Matriculation School, Unnamalaikadai
Christuraja Matriculation School, Marthandam
Good Shepered Matriculation School, Marthandam
Hindu Vidyalaya Matriculation School, Marthandam
Kids Oxford Matriculation School, Kuzhithurai
Vidya Jothi Matriculation School, Marthandam
Sri Vigneswara Matriculation School, Kappukad
Thursday, June 27, 2013
இவற்றைத்தான் நேர் சிந்தனை (Positive thinking) எதிர்மறை சிந்தனை (Negative thinking) என்றெல்லாம் சொல்கிறார்கள். நம்பிக்கையுள்ள மனது, அவநம்பிக்கையுள்ள மனது என்று புரியும்படி சொல்லலாம். இது வாழ்க்கை பற்றிய பார்வை மட்டுமல்ல, உடல் நலத்தோடும் தொடர்புடையது.
நேர் சிந்தனையுள்ள மனது, உடல் நலத்தோடு தொடர்புடையது.
எதிர்மறைச் சிந்தனையுள்ள மனது, நலக்கேட்டுடன் தொடர்புடையது எனலாம்.
நேர் சிந்தனையானது, உடல் நலம் பல வழிகளில் முன்னேற்றமடைய உதவுகிறது.
வாழ்நாள் அதிகரிக்கும். மனச் சோர்வு நோய்க்கான (Depression) வாய்ப்பு குறைவாகும்.
உடல் உள்ள நலன்கள் மேம்படும். மாரடைப்பு, பக்கவாதம் ஆகியவற்றால் இறப்பதற்கான சாத்தியம் குறைவாகும்.
நேர் சிந்தனையானது, வாழ்வின்
நெருக்கீடு நிறைந்த தருணங்களில் மனம் தளரவிடாது நம்பிக்கையுடன் செயலாற்ற
உதவும். இதனால் நெருக்கீட்டின் தீய விளைவுகளால் உடல்நலம் பாதிக்கப்படுவதைத்
தடுக்கிறது என நம்பப்படுகிறது.
நேர்
சிந்தனை உள்ளவர்களுக்கு பொதுவாக வாழ்க்கை பற்றிய நலமான நிலைப்பாடு உள்ளது.
இதனால் அவர்கள் பொதுவாக நல்ல வாழ்க்கை முறைகளைக் கடைப்பிடிக்கிறார்கள்.
உங்கள் வாழ்வைப் பார்த்து நீங்களே சிரிக்கக் கற்றுக்கொண்டால் அதைவிட பெரிய பேறு எதுவும் இருக்கமுடியாது.
மனதோடு மகிழ்ச்சியாகப் பேசுங்கள். உங்களை நீங்களே உற்சாகப்படுத்துங்கள்.
நேர்சிந்தனை கொண்ட மனது உங்களுக்கு வாழ்வில் நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும், உடல் நலத்தையும் கொண்டு வரும். நம்புங்கள்.!
Saturday, June 22, 2013
இவன் எதற்காக ஓடினான்
இந்த தம்பிகளெல்லாம் ஓடிக்கொண்டிருப்பது ஜூன் 19-ல் இங்கிலாந்தில்
காட்ரிப் நகரில் நடந்த இந்தியா-இலங்கை அரையிறுதி ஆட்ட மைதானத்தில்...
உலகின் பல நாடுகளிலும் நடந்த பல்வேறு ஈழத்தமிழர் ஆதரவு போராட்டங்களை விட அதிகமாக மக்களின் கவனத்தை ஈர்க்கும் முயற்சியே இந்த போராட்டம்.
பல கோடி மக்கள் பார்த்துக்கொண்டிருக்கும் இந்த போட்டியின் நேரலை காட்சிகளில் சில நொடிகள் மட்டுமே வந்தாலும் யார் இவர்கள்? எதற்காக இவர்கள் ஓடினார்கள் என்று உலக மக்கள் தேடும் வாய்ப்பு இந்த போராட்டத்தால் விளைந்தது...
நன்றி: அந்த வீரமிகு தம்பிகளுக்கு... அத்தனை பாதுகாப்புகளுக்கு மத்தியிலும் அவர்களால் இது முடிந்தது...
அதை இது போல் பறைசாற்ற மட்டுமாவது என்னால் முடிந்ததே!!
Tuesday, June 18, 2013
Controversial Moon Landing Photos Explained
10 Controversial Moon Landing Photos Explained
There is much controversy regarding the American Apollo Moon missions conducted from 1969 to 1972. Some people claim that they never happened and it was all a huge hoax. The shots taken during these moon landings were the fuel that alimented this conspiracy theory. Here are these photos, together with the scientific proof that they were real:
The scientific evidence for the waving flag is simple and reasonable, actually: If you look closely, you will notice a stiff wire into the material of the flag. Otherwise, the flag would have just hanged taunt- and how ugly is that? The so called flutter was unintentionally created while the astronauts were raising the flag.
These belts, which protect the Earth surface from the dangerous Sun radiations, are not actually as dangerous as people might think. In order to become harmful, the exposure should have been much longer.
This is nowhere near being true: the multiple-angle shadows only appeared because of the landscape: the astronomers took pictures on a hilly site and the sun was at that point near the horizon, thus creating the uneven shadows.
Even though some claim that the sun would have made the Moon so hot that the film and other gears would have melted, this is not quite so: All the landings took place at lunar down, when temperatures are bearable but also, fragile equipment was protected by special canisters. NASA officials would not neglect something as important as temperature.
Moisture is not always necessary: very fine grain dust are easily shaped because of the friction between them, which causes them to maintain their position.
This one is true: space debris could have easily killed the astronauts. Except that space is so enormous that the density of spatial leftovers remains extremely low (close to none). Also, the suits of the astronauts included a layer of Kelvar which was meant to protect them from such debris.
Some say that they expected the powerful engines to create a huge crater in the lunar surface. They are wrong though because, beneath the layer of dust, the moon is of hard rock.
Actually, this is a special buggy, conceived especially for being transported on the moon, from very light materials. It was also designed to fold up entirely so as to fit into the landing module.
People were shocked about the fact that the sky looks very empty- no stars were visible, thus concluding that the photos must be fake. But, in fact, no stars should have been visible because of the lightness of the objects in close proximity, which made the weak light of the stars to disappear completely.
The photo of Neil Armstrong and of the Eagle reflected in Aldrin’s visor is famous all over the world not only for its beauty, but also because it gave place to controversy: if both astronauts (only two walked on the moon at a time) were visible and none has a camera, than who made the pictures? Actually, they had cameras, but they were mounted on the astronauts’ chest, so that they don’t incommode them.
1. The American flag Waves
The scientific evidence for the waving flag is simple and reasonable, actually: If you look closely, you will notice a stiff wire into the material of the flag. Otherwise, the flag would have just hanged taunt- and how ugly is that? The so called flutter was unintentionally created while the astronauts were raising the flag.
2. The astronauts were not killed by radiation, as they left the Van Allen belt
These belts, which protect the Earth surface from the dangerous Sun radiations, are not actually as dangerous as people might think. In order to become harmful, the exposure should have been much longer.
3. Multiple-angle shadows show that there were multiple sources of light
This is nowhere near being true: the multiple-angle shadows only appeared because of the landscape: the astronomers took pictures on a hilly site and the sun was at that point near the horizon, thus creating the uneven shadows.
4. The high moon temperature would have been impossible to bear
Even though some claim that the sun would have made the Moon so hot that the film and other gears would have melted, this is not quite so: All the landings took place at lunar down, when temperatures are bearable but also, fragile equipment was protected by special canisters. NASA officials would not neglect something as important as temperature.
5. How did footprints appear with no mositure in the soil?
Moisture is not always necessary: very fine grain dust are easily shaped because of the friction between them, which causes them to maintain their position.
6. The micrometeors would have killed the astronauts
This one is true: space debris could have easily killed the astronauts. Except that space is so enormous that the density of spatial leftovers remains extremely low (close to none). Also, the suits of the astronauts included a layer of Kelvar which was meant to protect them from such debris.
7. The landing module created no crater?
Some say that they expected the powerful engines to create a huge crater in the lunar surface. They are wrong though because, beneath the layer of dust, the moon is of hard rock.
8. The rover was so big that it would have been impossible to transport it on the moon
Actually, this is a special buggy, conceived especially for being transported on the moon, from very light materials. It was also designed to fold up entirely so as to fit into the landing module.
9. There are no stars in the sky!
People were shocked about the fact that the sky looks very empty- no stars were visible, thus concluding that the photos must be fake. But, in fact, no stars should have been visible because of the lightness of the objects in close proximity, which made the weak light of the stars to disappear completely.
10. Who made the photos?
The photo of Neil Armstrong and of the Eagle reflected in Aldrin’s visor is famous all over the world not only for its beauty, but also because it gave place to controversy: if both astronauts (only two walked on the moon at a time) were visible and none has a camera, than who made the pictures? Actually, they had cameras, but they were mounted on the astronauts’ chest, so that they don’t incommode them.
Monday, June 17, 2013
காப்புக்காடு பங்கின் மறைக்கல்வி மாணவி ஆன்சி ராணி 478/500
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை
புனித அந்தோணியார் ஆலயம் காப்புக்காடு பங்கின் மறைக்கல்வி மாணவி ஆன்சி ராணி 500 க்கு 478 மதிப்பெண்கள் பெற்றமைக்கு maxaim softech solutions நிறுவனம் சார்பில் அருட்சகோதரி அவர்கள் பரிசினை வழங்குகிறார்கள்
காப்புக்காடு பங்கின் மறைக்கல்வி மாணவி ஜூஆன வின்சி 490/500
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை
புனித அந்தோணியார் ஆலயம் காப்புக்காடு பங்கின் மறைக்கல்வி மாணவி ஜூஆன வின்சி 500 க்கு 490 மதிப்பெண்கள் பெற்றமைக்கு maxaim softech solutions நிறுவனம் சார்பில் அருட்சகோதரி அவர்கள் பரிசினை வழங்குகிறார்கள்
Sunday, June 16, 2013
சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு
சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு
கால் கிலோ ஃபிரஞ்சு பீன்ஸ் வாங்கி, விதை நீக்கி, தண்ணீரில் கொதிக்க வைத்து (குறைந்தது 2 மணிநேரம்), மிக்ஸியில் நன்றாக அரைத்து குடித்து விட்டு, 10 நிமிடம் கழித்து, 2 லிட்டர் நீரை ( ஒரே முறையில் குடிக்க முடியவில்லையென்றால் சிறிது நேரம் விட்டு விட்டு) குடிக்க, சிறுநீரகக் கற்கள் வெளியே வந்துவிடும் என, தன் அனுபவத்தை எழுதியுள்ளார் ரவூஃப் இரகுமான் என்பவர்.
சிறுநீரகக்கல் வலி வந்த பிறகு அது தொடர்பாக, அவர் இணையதளத்தில் அலைந்தபோது படித்ததில் சில :
துளசி இலை சாறுடன், தேன் கலந்து ஆறு நாட்கள் உண்டால், கல் உடைந்து விடுமாம். ஆப்பிள் அடிக்கடி சாப்பிட்டாலும் கல் உருவாகாதாம். திராட்சையில் உள்ள, நீரும், பொட்டாசியம் உப்பும், கல் உருவாகுவதை தடுக்குமாம். மேலும், இந்தப் பழத்தில் உள்ள ஆல்புமின் மற்றும் சோடியம் குளோரைடு, கல் பிரச்சனைக்கு நல்ல தீர்வாக இருக்குமாம். மாதுளம் பழத்தின் விதையைப் பிழிந்து, ஒரு டேபிள் ஸ்பூன் அளவு எடுத்து, அதனுடன் 2 ஸ்பூன் கொள்ளுச் சாறுடன் சேர்த்து சாப்பிட்டால், கல் பிரச்சனை தீருமாம். அத்திப்பழத்தை, நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, ஒரு மாதம் தொடர்ந்து, காலையில் காலி வயிற்றில், பருகினால் பலன் தருமாம். தண்ணீர்பழம்(water melon ) அதிகம் உண்பதால் கல் பிரச்சனை தீருமாம். இளநீர் அதிக அளவு சேர்த்துக் கொள்வதாலும் கல் உருவாவதைத் தடுக்கலாமாம். வாழைத்தண்டு சாறுக்கு கல் உருவாவதைத் தடுக்கவும், உருவான கல்லை உடைக்கவும்(diffuse) திறன் உள்ளதாம்.
மேற்சொன்னதை எவ்வளவு உட்கொண்டாலும், குடிக்கும் தண்ணீரின் அளவு (தினமும் 2 லிட்டரிலிருந்து 3 லிட்டர் வரை) குறைந்தால் கல் உருவாவது நிச்சயம் என்கிறார்கள்.
இம்முறையில் பக்க விளைவுகளுக்கு சாத்தியமே இல்லையென்பதால், தைரியமாக பின்பற்றலாம். இதுவரை கல் பிரச்சனை வராதவர்களும் பின்பற்றலாம்.
கல் ஏற்பட்ட பின் வலியை பொறுக்கமுடியாதவர்கள் மருத்துவரிடம் சென்றுவிடுவதே நல்லது, என சில ஆலோசனைகளையும் தந்துள்ளார் ரவூஃப் இரகுமான்.
இரத்த தானம் செய்வதற்கு மேலும் பலர் முன்வர வேண்டும், ஐ.நா.
ஜூன்,14,2013. உலக அளவில் இரத்தம் தேவைப்படுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும்வேளை, ஒவ்வொரு நாடும் தன் நாட்டினருக்குத் தேவைப்படும் இரத்தத்தை, அந்நாட்டின் தன்னார்வத் தொண்டர்களிடமிருந்தே தானமாகப் பெறும் திட்டத்தை 2020ம் ஆண்டுக்குள் நிறைவேற்றுமாறு WHO என்ற உலக நலவாழ்வு நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
தற்போது 60 விழுக்காட்டு நாடுகள் தங்களுக்குத் தேவையான இரத்தத்தைத் தங்களது மக்களிடமிருந்தே பெறுகின்றன என்றும், இவற்றில் 35 விழுக்காடு அதிக வருவாய் உள்ள நாடுகள் என்றும் WHO நிறுவனம் கூறியுள்ளது.
ஜூன் 14 இவ்வெள்ளிக்கிழமையன்று அனைத்துலக இரத்த தானம் தினம் கடைப்பிடிக்கப்பட்டதையொட்டி அறிக்கை வெளியிட்டுள்ள உலக நலவாழ்வு நிறுவனம், இன்றைய உலகின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு இன்னும் பலர் இரத்த தானம் செய்வதற்கு முன்வருமாறு கேட்டுள்ளது.
2004ம் ஆண்டில் 80 இலட்சம் பேர் இரத்த தானம் செய்தனர், ஆனால் இவ்வெண்ணிக்கை 2011ம் ஆண்டில் ஏறக்குறைய 8 கோடியே 30 இலட்சமாக உயர்ந்தது, ஆயினும் இவ்வெண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது WHO நிறுவனம்.
உலகில் ஆண்டுதோறும் ஏறக்குறைய 10 கோடியே 70 இலட்சம் பேர் இரத்த தானம் செய்கின்றனர், இவர்களில் பாதிப்பேர் பணக்கார நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
Friday, May 31, 2013
KBA வாழ்த்துக்கள்
பத்தாம் வகுப்பு தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்றமைக்கு
(ரபேல் - மேரி செலஸ்டின் ராணி) அருள் ராஜ் - 474
(டைட்டஸ் - மேரி நேஸ்பல்) ஆட்லின் டைட்டஸ் - 470
(ரபேல் - மேரி செலஸ்டின் ராணி) அருள் ராஜ் - 474
(டைட்டஸ் - மேரி நேஸ்பல்) ஆட்லின் டைட்டஸ் - 470
Sunday, May 19, 2013
திருத்தந்தை பிரான்சிஸ் : பிறரது வாழ்வில் தலையிடும் சோதனையைக் கிறிஸ்தவர்கள் மேற்கொள்ள வேண்டும்
திருத்தந்தை பிரான்சிஸ் : பிறரது வாழ்வில் தலையிடும் சோதனையைக் கிறிஸ்தவர்கள் மேற்கொள்ள வேண்டும்
மே,18,2013. திருஅவையில் எவ்வளவு வீண்பேச்சுக்கள் பேசப்படுகின்றன, கிறிஸ்தவர்களாகிய நாம் பயனில்லாதப் பேச்சுக்களை எப்படி பேசுகிறோம், தவறான தகவல், பெயரைக் கெடுத்தல், அவதூறு ஆகிய மூன்று கூறுகளை இந்த நடத்தைக் கொண்டுள்ளது, இவை மூன்றுமே பாவங்கள் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
யோவானைக் கண்டதும் பேதுரு இயேசுவிடம், இவருக்கு என்ன ஆகும் என்று கேட்டதற்கு இயேசு, அது பற்றி உனக்கு என்ன எனப் பேதுருவிடம் கேட்கும் இந்நாளின் நற்செய்தி வாசகத்தை மையமாக வைத்து மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ், இந்நிகழ்வை வைத்து இக்காலக் கிறிஸ்தவர்களுக்கு ஓர் எச்சரிப்பையும் முன்வைத்தார்.
இயேசுவோடு அன்பு உரையாடலை மேற்கொண்ட பேதுருவின் உரையாடல் திசை மாறுகிறது, பிறரது வாழ்வில் தலையிடும் சோதனையால் அவர் துன்புறுகிறார் என்றுரைத்த திருத்தந்தை, பேதுரு உட்பட்ட இரு சோதனைகள் குறித்து விளக்கினார்.
ஒருவரைப் பிறரோடு ஒப்பிட்டுப் பேசுதல், புறணி பேசுதல் ஆகிய இரு சோதனைகள் குறித்து இச்சனிக்கிழமை காலையில் புனித மார்த்தா இல்லத்தில் நிகழ்த்திய திருப்பலி மறையுரையில் விளக்கிய திருத்தந்தை, ஒருவரைப் பிறரோடு ஒப்பிட்டுப் பேசும்போது அது கசப்புணர்விலும், பொறாமையிலும்கூடக் கொண்டுபோய் விடுகின்றது,பொறாமை கிறிஸ்தவச் சமூகத்தை அரித்து விடுகின்றது என்று கூறினார்.
அடுத்து, புறணி பேசுதல். இது முதலில் அறிவார்ந்த வழியில் தொடங்கி பின்னர் மோசமாக உணரும் நிலையில் விட்டுவிடுகின்றது, திருஅவையில் நாம் அனைவரும் புறணி பேசுகிறோம், இது ஒருவர் ஒருவரைப் புண்படுத்துகின்றது, இது ஒருவர் மற்றவரை வீழ்த்த விரும்புவதுபோல் உள்ளது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மீட்பு என்பது பிறரோடு ஒப்பிடுவதிலோ, வீண்பேச்சுப் பேசுவதிலோ இல்லை, மாறாக, இயேசுவைப் பின்செல்லுவதில் இருக்கின்றது, எனவே நாம் பிறரின் வாழ்வில் தலையிடாதிருக்கும் வரத்தை இயேசுவிடம் கேட்போம் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
Thursday, May 9, 2013
மறைந்திருக்கும் கடற்கரை (Hidden beach marieta islands)
மெக்சிகோ நாட்டின் Puerto Vallarta பசிபிக் பெருங்கடற்பகுதியிலுள்ள சிறிய Marieta தீவுகளில் பூமிக்கு கீழே ஒரு கடற்கரை மறைந்திருக்கின்றது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற எரிமலை வெடிப்புகளால் இந்தMarieta தீவுகள் உருவாகியுள்ளன. இந்த Marieta தீவுகளிலுள்ள தண்ணீர்க் குகைப்பாதை வழியாக ஏறக்குறைய 40 முதல் 50 அடிவரை நீந்திச் சென்றால் அங்கு மறைந்திருக்கும் கடற்கரையைக் காணமுடியும். இந்தக் குகைப்பாதையில் பாறைக்கும் தண்ணீருக்கும் இடையே ஏறக்குறைய 5 முதல் 6 அடி உயர இடைவெளிதான் இருக்கிறது. இப்பாதை தண்ணீருக்குக் கீழேயிருக்கும் சுரங்கப்பாதை அல்ல. சுற்றிலும் பாறைகளை மதில்சுவர் போன்று கொண்டிருந்து, அவற்றுக்குள் அமைந்துள்ள இந்தக் கடற்கரை பசிபிக் பெருங்கடலுடன் தொடர்பு கொண்டுள்ளது. இங்கு ஏராளமான பவளப்பாறை மீன்கள் உட்பட 103 வகையான உயிரினங்கள் தெளிந்த நீலநிற நீரில் அங்குமிங்கும் அலைவது பார்ப்பவர் கண்களுக்கு மிக அழகாகத் தெரிகின்றன. சில நேரங்களில் திமிங்கிலங்களும் அப்பக்கம் வருகின்றன. இந்த உயிரினங்கள் அனைத்தும் எழுப்பும் இசை உண்மையிலேயே மிக இனிமையாக இருப்பதாகச் சொல்லப்படுகின்றது. Puerto Vallarta விலிருந்து மேற்கிலும், வடமேற்கிலும் ஏறக்குறைய ஒரு மணிநேரம் படகில் சென்றால் இந்த Marieta தீவுகளை அடையலாம். இத்தீவுகளில் மனிதர் யாரும் வாழாததால், இதனை ஒரு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, 1900களின் தொடக்கத்தில் மெக்சிகோ அரசு இங்கு இராணுவ நடவடிக்கைகளை நடத்தியது. இப்பரிசோதனைகளின்போது நடத்தப்பட்ட பெருமளவான வெடிகள் மற்றும் குண்டுவெடிப்புகளால் இத்தீவுகளில் நம்புதற்கரிய பல குகைகளும் பாறைகளும் உருவாகியுள்ளன. 1960களின் இறுதியில் அறிவியலாளர் Jacques Cousteau என்பவரின் தூண்டுதலால் அனைத்துலக அளவில் எழுந்த கடும் கண்டனங்களுக்குப் பின்னர் மெக்சிகோ அரசு இத்தீவுகளை தேசியப் பூங்காவாக அறிவித்து, மீன்பிடித்தல்,வேட்டையாடுதல் உட்பட மனிதரின் அனைத்துச் செயல்பாடுகளுக்கு எதிராகப் பாதுகாத்து வருகிறது.
சூரிய ஒளி நமது உடலுக்கு விளைவிக்கும் கெடுதலை விட, நன்மைகளே அதிகம்
மே,08,2013. சூரிய ஒளி நமது உடலுக்கு விளைவிக்கும் கெடுதலை விட, நன்மைகளே அதிகம் என்று அண்மைய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
Edinburgh பல்கலைக் கழகம் மேற்கொண்ட ஓர் ஆய்வின் அடிப்படையில், சூரிய ஒளிக்கு உட்படுத்தப்படும் உடலில்,இரத்த அழுத்தம் குறைந்து, இதயம் தொடர்பான குறைகள் நீங்க வழி உண்டு என்று தெரிய வந்துள்ளது.
சூரிய ஒளியிலிருந்து உடலில் விழும் Ultra Violet - அதாவது, புற நீலக் கதிர்கள், வெளிப்படுத்தும் ஒருவகை வேதியல் மாற்றம் உடலில் உள்ள இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது என்றும், இதனால் மாரடைப்பு நோயைத் தடுக்க முடியும் என்றும், அதேநேரம், உடலில் D வைட்டமின் அதிகமாகிறது என்றும் இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இப்புதன் முதல் சனிக்கிழமை முடிய Edinburgh நகரில் நடைபெறும் அகில உலக தோல் நிபுணர்கள் கருத்தரங்கில் இந்த ஆய்வின் முடிவுகள் வெளியிடப்படும் என்று BBC செய்தி கூறியுள்ளது.
Subscribe to:
Posts (Atom)