ஒரே மரத்தில் 250 வகையான ஆப்பிள்களை காய்க்க செய்யும் வினோத மரத்தை வளர்த்து, ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த தோட்டக்கலைஞர் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.
ஜெர்மனியின் West Sussex பகுதியில் உள்ள Chidham என்ற ஊரைச் சேர்ந்த Paul Barnett என்ற தோட்டக்கலைஞர், 250 வகையான ஆப்பிள்கள் காய்க்கும் வினோத மரம் ஒன்றை தனது தோட்டத்தில் வளர்த்துள்ளார்.
கடந்த 20 வருடங்களாக மிகவும் கவனத்தோடு பல்வேறு வகை ஆப்பிள் மரங்களின் ஒட்டு ரகங்களை வைத்து தனது ஆப்பிள் மரத்தை வளர்த்து வருவதாக Paul Barnett கூறியுள்ளார்.
தற்போது 20 அடி உயரம் வளர்ந்துள்ள இந்த ஆப்பிள் மரத்தில், சமையலுக்கு பயன்படும் Withington Fillbasketஎனப்படும் அமெரிக்க ஆப்பிள் முதல், 1908ம் ஆண்டைச் சேர்ந்த Eady’s Magnum போன்ற பல்வேறு வகைகளும் காய்ப்பதாக Paul Barnett பெருமையுடன் தெரிவித்துள்ளார்.
இவரது மரத்தில் காய்க்கும் ஆப்பிள்களை பொதுமக்கள் வந்து ஆர்வத்துடன் பார்த்து, வாங்கி, சுவைத்து நன்றாக இருப்பதாக பாராட்டுகின்றனர். இந்த மரம் தற்போது ஜெர்மனியில் புகழடைந்து வருகிறது.
No comments:
Post a Comment