Wednesday, October 30, 2013

"சிறு குழந்தைகளை என்னிடம் வர விடுங்கள்" - திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செயல்களில்

நம்பிக்கை ஆண்டை கொண்டாடும் விதமாக ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த கத்தோலிக்க குடும்பங்கள் மத்தியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வீற்றிருக்க, கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த சிறுவன் ஒருவன் திருத்தந்தையை உற்று நோக்கி அருகில் செல்கிறான்... 
சுமார் 80 க்கு மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகளை சந்திக்க வரும்போது திருத்தந்தைக்கு தொந்தரவு செய்யாமல் இருக்க கார்டினல்கள் பலர் அந்த சிறுவனை அவன் இருப்பிடத்திற்கு அழைத்து செல்ல முற்பட.....
அந்த சிறுவன் இன்னமும் தொடர்கிறான் ..... திருத்தந்தை உரையாற்றும் போது இன்னமும் அங்கேயே இருந்து அங்கிருந்து போக மறுத்து அவருடைய காலை கட்டி பிடித்தபடி நிற்க....அவர் அந்த சிறுவனை தன் இருக்கையில் அமர வைத்து பின் தனது உரையை தொடர்கிறார்.

ஞாயிறு திருப்பலிகளில், கோவிலுக்குள் சேட்டை செய்யும் சிறுவர்களை முறைப்பதும், ஒன்றும் அறியாமல் அழும் சிறு குழந்தைகளின் தாய்மார்களை வெளியே செல்ல அதட்டுவதுமாக இருக்கும் அருட்பணியாளர்களை மட்டுமே பார்த்து வந்த நமக்கு இது ஒரு அதிர்ச்சி மட்டுமல்ல மாறாக பேரதிர்ச்சியும் கூட....

இப்படி ஒரு திருத்தந்தை நமக்கு கிடைத்தது ஒரு வரபிரசாதம் எனலாம்.

ஒரே மரத்தில் 250 வகையான ஆப்பிள்கள்: ஜெர்மனியில் சாதனை


ஒரே மரத்தில் 250 வகையான ஆப்பிள்களை காய்க்க செய்யும் வினோத மரத்தை வளர்த்துஜெர்மன் நாட்டைச் சேர்ந்த தோட்டக்கலைஞர் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.
ஜெர்மனியின் West Sussex பகுதியில் உள்ள Chidham என்ற ஊரைச் சேர்ந்த Paul Barnett என்ற தோட்டக்கலைஞர், 250 வகையான ஆப்பிள்கள் காய்க்கும் வினோத மரம் ஒன்றை தனது தோட்டத்தில் வளர்த்துள்ளார்.
கடந்த 20 வருடங்களாக மிகவும் கவனத்தோடு பல்வேறு வகை ஆப்பிள் மரங்களின் ஒட்டு ரகங்களை வைத்து தனது ஆப்பிள் மரத்தை வளர்த்து வருவதாக Paul Barnett கூறியுள்ளார்.
தற்போது 20 அடி உயரம் வளர்ந்துள்ள இந்த ஆப்பிள் மரத்தில்சமையலுக்கு பயன்படும் Withington Fillbasketஎனப்படும் அமெரிக்க ஆப்பிள் முதல்1908ம் ஆண்டைச் சேர்ந்த Eady’s Magnum போன்ற பல்வேறு வகைகளும் காய்ப்பதாக Paul Barnett பெருமையுடன் தெரிவித்துள்ளார்.
இவரது மரத்தில் காய்க்கும் ஆப்பிள்களை பொதுமக்கள் வந்து ஆர்வத்துடன் பார்த்துவாங்கிசுவைத்து நன்றாக இருப்பதாக பாராட்டுகின்றனர். இந்த மரம் தற்போது ஜெர்மனியில் புகழடைந்து வருகிறது.

காது கேளாதோர் தினம்

காது கேளாதோர் தினம்

ஒலியைக் கேட்பதில் சிரமம் ஏற்படுவதையே காது கேளாமை என்று சொல்கிறோம். உலக மக்கள் தொகையில் 5 விழுக்காட்டுக்கு அதிகமானோர், அதாவது ஏறக்குறைய 36 கோடிப் பேர் காது கேளாதவர்கள். இவர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் வளரும் நாடுகளில் உள்ளனர் எனவும், ஆரம்பத்திலே சிகிச்சை எடுத்துக்கொள்வதன்மூலம் இவர்களில் பாதிப்பேரைக் குணப்படுத்திவிடலாம் எனவும் உலக நலவாழ்வு நிறுவனம் கூறுகிறது. உலகில் ஏறக்குறைய 40  விழுக்காட்டினருக்குத் தங்களின் 65வது வயதில் காது கேளாமை பிரச்சனை ஏற்படுகிறது. மனிதரது காதுசாதாரணமாக 20 ஹெர்ட்ஸிலிருந்து 20 கிலோ ஹெர்ட்ஸ்வரை கேட்கும் திறன் பெற்றது. அதிக ஒலியைக் கேட்பதால்கூட கேட்கும் திறன் பாதிக்கப்படுகிறது. பெற்றோருக்கு இக்குறைபாடு இருப்பின்,குழந்தையையும் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. அடிக்கடி சளி அல்லது தொண்டைவலி ஏற்பட்டாலும் காது கேட்காமல் போகலாம். குழந்தைகளுக்கு காது கேளாமை இருந்தால் உடனே மருத்துவரிடம் சென்று பரிசோதிக்க வேண்டும். இல்லையெனில் இது குழந்தையின் பேச்சுத்திறனையும் பாதிக்கும். கைபேசியின் கதிர்வீச்சு காரணமாகக்கூட கேட்கும் திறன் பாதிப்படைகிறது. காதில் அழுக்கைச் சுத்தம் செய்கிறோம் என்ற பேரில் கண்ட கண்ட குச்சியைப் பயன்படுத்துவதுகாதின் கேட்கும் திறனைப் பாதிக்கும்.
1951ம் ஆண்டு செப்டம்பரில், முதல் அனைத்துலக காது கேளாதோர் மாநாடு நடத்தப்பட்டது. 1958ம் ஆண்டில் அனைத்துலக காது கேளாதோர் தினம் தொடங்கப்பட்டது. பின் இது செப்டம்பர் கடைசி வாரம் காது கேளாதோர் வாரமாகவும்செப்டம்பர் கடைசி ஞாயிறு அனைத்துலக காது கேளாதோர் தினமாகவும் மாற்றப்பட்டது.
காது கேளாதோரிடம் பேசும்போது கவனிக்க வேண்டியவை.....
காது கேட்கவில்லை என்ற உணர்வை அவர்களுக்கு ஒருபோதும் ஏற்படுத்தக் கூடாது. இதை அல்லது அதை எப்படிச் செய்தாய் போன்ற வார்த்தைகளை அவர்களிடம் கேட்கக் கூடாது.
அவர்களுக்கு வணக்கம் சொல்லும்பொழுது கைகளைக் குலுக்காமல் மெதுவாக அணைத்துச் சொல்வது நல்லது.
நாம் உணருவதை அவர்கள் புரிந்துகொள்ளும் வகையில் சில அடிப்படையான சைகை மொழியைத் தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது.
காது கேளாதோர்க்கு சரிநிகர் மரியாதையும் மதிப்பும் கொடுக்க வேண்டும். மற்ற மக்கள் மத்தியில் அவர்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

ஒரே செடியில் தக்காளி, உருளைக் கிழங்கு, பிரிட்டன் நிறுவனம் சாதனை

 ஒரே செடியில் தக்காளியும்உருளைக்கிழங்கும் விளையும் நவீன முறையைக் கண்டுபிடித்து பிரிட்டனை சேர்ந்த நிறுவனம் ஒன்று சாதனை படைத்துள்ளது.
பிரிட்டனைச் சேர்ந்த Thompson & Morgan என்ற நிறுவனம் வேளாண்மையில் புதுமைகளைப் புகுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக ஒரே செடியில் இரு வேறு காய்களை விளைவிக்கும் நவீன யுக்தியை இந்நிறுவனம் கையாண்டு அதில் வெற்றியும் பெற்றுள்ளது. அதன்படி உருளைக்கிழங்கையும்தக்காளியையும் ஒரே செடியில் விளைவித்து அறுவடையும் செய்துள்ளது.
இது குறித்துப் பேசிய அந்நிறுவன தலைவர் பவுல் ஹான்சர்டு (Paul Hansord) இரு வெவ்வேறு காய்கறிகளை ஒரே செடியில் விளைவிப்பது மிகவும் கடினமான காரியம் என்று கூறினார்.
மரபியல் மாற்றங்களைச் செய்து இதற்குமுன் இது போன்ற செயல்களில் அறிவியலாளர்கள் வெற்றி கண்டுள்ளனர்எனினும் அவ்வகையான மாற்றங்கள் செய்யாமல்இயற்கையான முறையில் இரு செடிகளை இணைத்து அவற்றில் விளையும் காய்கறிகளைஒரே செடியில் முதல் முறையாகத் தற்போது விளைவித்துள்ளோம் என்றும் ஹான்சர்டு கூறினார்.
இரு தாவரங்களின் திசுக்களையும் பிரித்து ஒரு குறிப்பிட்ட நிலைக்குப் பின் இரண்டும் ஒன்றாக ஒரே தொட்டியில் வளர்க்கப்பட்டன. அதன்பின் சரியான நேரத்தில் தக்காளிகள் காய்க்கத் துவங்கினவேர்ப்பகுதியில் உருளைக்கிழங்கும் முளைத்திருந்தது. சோதனை முறையில் மட்டுமின்றி வியாபார ரீதியாகவும் இந்த முயற்சி வெற்றி பெற்றுள்ளது.
இதில் விளையும் காய்கறிகள் மிகுந்த சுவையுடன் இருப்பதால் மக்கள் விரும்பி வாங்கிச் செல்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
பிரிட்டனில் கண்டறியப்பட்ட இந்த முறையை தற்போது நியூசிலாந்து விவசாயிகளும் பின்பற்றத் தொடங்கியுள்ளனர்.

Thursday, October 24, 2013

காப்புக்காடு அருகே வாகனம் மோதி முதியவர் பலி

காப்புக்காடு அருகே மட்டுபாவு ஜங்ஷன்-ல் இருசக்கர வாகனம் மோதி முதியவர் ஒருவர் பலியானர். விபத்து நடந்த நேரம்: 24/10/2013 9.30 PM