Monday, April 29, 2013

திருத்தந்தை - நம்மை அடித்துத் துவைக்கக் காத்திருக்கும் துப்புரவுத் தொழிலாளி அல்ல இயேசு


ஏப்.29,2013.  ஒப்புரவு அருள்சாதனம் பெறும் இடம்நம் பாவங்கள் தானாகவே சுத்தம் செய்யப்படும் ஓர் உலர் சலவையகம் அல்ல என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
இத்திங்கள் காலை புனித மார்த்தா இல்லத்தில் உள்ள சிற்றாலயத்தில்திருப்பீட மேலாளர்கள் பணியில் ஈடுபட்டிருப்பவருக்குத் திருப்பலி நிகழ்த்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மன்னிப்பதற்குக் காத்திருக்கும் இறைவனை மையப்படுத்தி தன் மறையுரையை வழங்கினார்.
புனித யோவான் எழுதிய முதல் திருமுகத்தில் காணப்படும் "கடவுள் ஒளியாய் இருக்கிறார்அவரிடம் இருள் என்பதே இல்லை" என்ற வார்த்தைகளை மையமாகக் கொண்டு மறையுரை வழங்கியத் திருத்தந்தைநம் அனைவரின் வாழ்விலும் இருள் உள்ளது எனினும்நாமும் ஒளியில் வாழ அழைக்கப்பட்டுள்ளோம் என்று எடுத்துரைத்தார்.
நம்மில் இருக்கும் இருளையும்நாம் ஒளிக்குச் செல்லவேண்டும் என்ற தேவையையும் உணராமல் வாழ்வோர் சந்திக்கும் ஆபத்துகளையும் தன் மறையுரையில் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஒப்புரவு அருட்சாதனத்தில் நம்மை அடித்துத் துவைக்கக் காத்திருக்கும் துப்புரவுத் தொழிலாளி அல்ல,இயேசு என்பதைக் கூறியத் திருத்தந்தைஇவ்வருட் சாதனத்தின் வழியாக நம்மை எப்போதும் மன்னிக்கக் காத்திருக்கும் இயேசுவை நாம் திரும்பத் திரும்ப அணுகிச் செல்ல தயங்கக்கூடாது என்பதையும் தன் மறையுரையில் வலியுறுத்தினார்.
இவ்வியாழனன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட Twitter செய்தியில், "இன்று நான் பிறருக்கு ஓர் உதவி செய்துள்ளேன் என்று ஒவ்வொரு நாள் முடிவிலும் நாம் ஒவ்வொருவரும் சொல்ல முடிந்தால்,எவ்வளவு அற்புதமாக இருக்கும்!" என்று கூறியுள்ளார். ஆங்கிலம்இத்தாலியம்பிரெஞ்ச்ஸ்பானியம்,அரேபியம் உட்பட 9 மொழிகளில் @Pontifex எனப்படும் Twitter பக்கத்தில் இச்செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

Saturday, April 27, 2013

பூமியைக் காப்பதில் தனியொருவரின் பங்கு  • பயன்படுத்தும் வாகனத்தை சரியாகப் பராமரித்துஅதிகப் புகையை வெளியிடாமல் பார்த்துக் கொள்ளலாம்.
  • பிளாஸ்டிக் பை,  பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்திவிட்டு அதனைத் தூக்கி எறியாமல்மறு சுழற்சிக்குப் பயன்படுத்தலாம்.
  • வீட்டிலோவீட்டுப்பக்கத்திலோ இடம் இருந்தால்மரக்கன்றுகளை நட்டுப் பராமரிக்கலாம்.
  • வாங்கிப் போட்டுள்ள இடங்களில் தற்போதைக்கு குடியேற முடியாமல் இருந்தாலும் அவ்விடங்களில் ஒரு சில மரங்களையாவது நடலாம்.
  • ஏதாவது ஒரு காரணத்துக்காக ஒரு மரத்தை வெட்ட நேர்ந்தால்அதற்குப் பதிலாக குறைந்தது 5 மரக்கன்றுகளையாவது நட்டு விடலாம்.
  • வீட்டில் இருக்கும் மின் விளக்குகளை எல்.இ.டி விளக்குகளாக மாற்றலாம். குண்டுப் பல்புகளின் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்கலாம்.
  • தேவையற்ற மின்சாதனப் பயன்பாட்டைத் தவிர்க்கலாம். ஏனெனில் ஒரு யூனிட் மின்சாரத்தை மிச்சப்படுத்துவது2 யூனிட் மின்சார உற்பத்திக்குச் சமமாகும்.
  • சூரிய ஒளி மூலமாக மின்சாரத்தைத் தயாரித்து இயங்கும் கருவிகளைப் பயன்படுத்தலாம்.
  • கணனிகளைப் பயன்படுத்தும்போது10 நிமிடத்துக்கு மேல் பயன்படுத்தாமல் இருந்தால்தானாகவே கணனித்திரைகள் ஆப் ஆகும் வகையில் செய்துவிடலாம்.
  • தண்ணீரைத் தேவைக்கு அதிகமாகப் பயன்படுத்துவதைக் குறைத்துக் கொள்ளலாம். ஒவ்வொரு சொட்டுத் தண்ணீரையும் காசு கொடுத்து வாங்கியிருந்தால் எவ்வாறு பயன்படுத்துவோமோ அப்படிப் பயன்படுத்தினால் அது நாட்டுக்கு நல்லது.

Monday, April 22, 2013

வருந்துகிறோம்

காப்புக்காடு பகுதியை சார்ந்த செல்வன் சாஜூஅவர்கள் அம்மா திருமதி ஜானசீலம் அவர்கள் இன்று நோயினால் காலமானார்கள். அவரது குடும்பத்தினர்களுடன் சேர்ந்து நாமும் வருந்துகிறோம்

Saturday, April 20, 2013

மரண அறிவிப்பு : விஜய குமார் த/பெ. சுப்பு, (புளி வியாபாரம்) காப்புக்காடு


திரு விஜய குமார் த/பெ. சுப்பு, (புளி வியாபாரம்) காப்புக்காடு அவர்கள் இன்று காலை சாலை விபத்தில் மரணமடைந்தார்கள். அவரது குடும்பத்தார்களுடன் நாமும் வருத்தத்தை பகிர்ந்து கொள்கிறோம்.

Wednesday, April 17, 2013

மனிதர் மட்டுமல்ல... மனித மொழியும் குரங்கிலிருந்தே...மனிதர்கள் மட்டுமல்லஅவர்களின் மொழிகளும் குரங்கிலிருந்தே பரிணமித்தன என்பதைத் தெரிவிக்கும் ஆய்வு ஒன்றின் முடிவுகள் அண்மையில் வெளியாகியுள்ளன.
எத்தியோப்பிய காடுகளில் வாழும் பபூன் வகை (baboon) குரங்குக்கு நெருங்கிய பிரிவான கெலாடா வகை (gelada baboon) குரங்குக்கு சொந்தமான சிக்கலான குரல்கள் மனிதர்களின் ஆதிமொழியை ஒத்திருக்கலாம் என்றும்,கெலாடா குரங்கின் ஒலிகள்மனிதர்களிடம் மொழிகள் தோன்றிய விதத்தை விளக்கப் பயன்படும் என்றும் உயிரியல் அறிஞர்கள் நம்புகின்றனர்.
Current Biology எனும் அறிவியல் இதழில் Michigan பல்கலைக்கழகத்தைச் சார்ந்த Thore Bergman என்பவர் மேற்கொண்ட புதிய ஆய்வின் முடிவுகளில் ஒன்றாககெலாடா குரங்குகளின் ஒலிகள்மனிதர்களின் பேச்சு ஒலிகளின் அம்சங்களுக்கு மிகவும் நெருங்கி வருகின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.
மனிதர்கள் பேசும்போது தாடையும்உதடும் நாக்கும் ஒரே நேரத்தில் சேர்ந்து இயங்குவதைப்போலவேகெலாடா குரங்குகள் ஒலியெழுப்பும்போதுஅவற்றின் தாடைகளும்உதடுகளும்நாக்கும் ஒரே நேரத்தில் சேர்ந்து செயற்படுவதாகவும் இந்த ஆய்வை மேற்கொண்டோர் குறிப்பிட்டுள்ளனர். தங்கள் ஆய்வின் அடுத்தக் கட்டமாக,கெலாடா குரங்குகளின் ஒலிகளுக்குத் தனிப்பட்ட அர்த்தம் ஏதும் இருக்கிறதா என்பதை இக்குழுவினர் ஆராயவிருக்கிறார்கள்.