மே,08,2013. சூரிய ஒளி நமது உடலுக்கு விளைவிக்கும் கெடுதலை விட, நன்மைகளே அதிகம் என்று அண்மைய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
Edinburgh பல்கலைக் கழகம் மேற்கொண்ட ஓர் ஆய்வின் அடிப்படையில், சூரிய ஒளிக்கு உட்படுத்தப்படும் உடலில்,இரத்த அழுத்தம் குறைந்து, இதயம் தொடர்பான குறைகள் நீங்க வழி உண்டு என்று தெரிய வந்துள்ளது.
சூரிய ஒளியிலிருந்து உடலில் விழும் Ultra Violet - அதாவது, புற நீலக் கதிர்கள், வெளிப்படுத்தும் ஒருவகை வேதியல் மாற்றம் உடலில் உள்ள இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது என்றும், இதனால் மாரடைப்பு நோயைத் தடுக்க முடியும் என்றும், அதேநேரம், உடலில் D வைட்டமின் அதிகமாகிறது என்றும் இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இப்புதன் முதல் சனிக்கிழமை முடிய Edinburgh நகரில் நடைபெறும் அகில உலக தோல் நிபுணர்கள் கருத்தரங்கில் இந்த ஆய்வின் முடிவுகள் வெளியிடப்படும் என்று BBC செய்தி கூறியுள்ளது.
No comments:
Post a Comment