சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு
கால் கிலோ ஃபிரஞ்சு பீன்ஸ் வாங்கி, விதை நீக்கி, தண்ணீரில் கொதிக்க வைத்து (குறைந்தது 2 மணிநேரம்), மிக்ஸியில் நன்றாக அரைத்து குடித்து விட்டு, 10 நிமிடம் கழித்து, 2 லிட்டர் நீரை ( ஒரே முறையில் குடிக்க முடியவில்லையென்றால் சிறிது நேரம் விட்டு விட்டு) குடிக்க, சிறுநீரகக் கற்கள் வெளியே வந்துவிடும் என, தன் அனுபவத்தை எழுதியுள்ளார் ரவூஃப் இரகுமான் என்பவர்.
சிறுநீரகக்கல் வலி வந்த பிறகு அது தொடர்பாக, அவர் இணையதளத்தில் அலைந்தபோது படித்ததில் சில :
துளசி இலை சாறுடன், தேன் கலந்து ஆறு நாட்கள் உண்டால், கல் உடைந்து விடுமாம். ஆப்பிள் அடிக்கடி சாப்பிட்டாலும் கல் உருவாகாதாம். திராட்சையில் உள்ள, நீரும், பொட்டாசியம் உப்பும், கல் உருவாகுவதை தடுக்குமாம். மேலும், இந்தப் பழத்தில் உள்ள ஆல்புமின் மற்றும் சோடியம் குளோரைடு, கல் பிரச்சனைக்கு நல்ல தீர்வாக இருக்குமாம். மாதுளம் பழத்தின் விதையைப் பிழிந்து, ஒரு டேபிள் ஸ்பூன் அளவு எடுத்து, அதனுடன் 2 ஸ்பூன் கொள்ளுச் சாறுடன் சேர்த்து சாப்பிட்டால், கல் பிரச்சனை தீருமாம். அத்திப்பழத்தை, நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, ஒரு மாதம் தொடர்ந்து, காலையில் காலி வயிற்றில், பருகினால் பலன் தருமாம். தண்ணீர்பழம்(water melon ) அதிகம் உண்பதால் கல் பிரச்சனை தீருமாம். இளநீர் அதிக அளவு சேர்த்துக் கொள்வதாலும் கல் உருவாவதைத் தடுக்கலாமாம். வாழைத்தண்டு சாறுக்கு கல் உருவாவதைத் தடுக்கவும், உருவான கல்லை உடைக்கவும்(diffuse) திறன் உள்ளதாம்.
மேற்சொன்னதை எவ்வளவு உட்கொண்டாலும், குடிக்கும் தண்ணீரின் அளவு (தினமும் 2 லிட்டரிலிருந்து 3 லிட்டர் வரை) குறைந்தால் கல் உருவாவது நிச்சயம் என்கிறார்கள்.
இம்முறையில் பக்க விளைவுகளுக்கு சாத்தியமே இல்லையென்பதால், தைரியமாக பின்பற்றலாம். இதுவரை கல் பிரச்சனை வராதவர்களும் பின்பற்றலாம்.
கல் ஏற்பட்ட பின் வலியை பொறுக்கமுடியாதவர்கள் மருத்துவரிடம் சென்றுவிடுவதே நல்லது, என சில ஆலோசனைகளையும் தந்துள்ளார் ரவூஃப் இரகுமான்.
No comments:
Post a Comment