Thursday, March 14, 2013

புதியத் திருத்தந்தை முதலாம் பிரான்சிஸ் - 13.03.13


புதியத் திருத்தந்தை முதலாம் பிரான்சிஸ்
சிறப்புச் செய்திகள்
13.03.13


en_0313_specrpt_PizzeyOnNewPope_480x360


1. திருஅவையின் 266வது திருத்தந்தையாகப் பொறுப்பேற்கும் இயேசு சபை கர்தினால் Jorge Mario Bergoglio

மார்ச்,13,2013. 2013ம் ஆண்டுமார்ச் 13புதன் இரவு 8.12 மணிக்கு புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தின் மேல்மாடத்தில் தோன்றிய கர்தினால் Jean-Louis Tauran நாம் ஒரு திருத்தந்தையைப் பெற்றுள்ளோம் என்று அறிவித்தார்.
திருஅவையின் 266வது திருத்தந்தையாகப் பொறுப்பேற்கும் கர்தினால் Jorge Mario Bergoglio, முதலாம் பிரான்சிஸ் என்ற பெயரை ஏற்றுள்ளார்.
1936ம் ஆண்டு டிசம்பர் 17ம் தேதி Argentina நாட்டின் Buenos Aires நகரில் பிறந்தவர் Jorge Mario Bergoglioஐந்து குழந்தைகள் கொண்ட குடும்பத்தில் பிறந்த இவரது தந்தை இரயில் துறையில் பணிபுரிந்த ஓர் இத்தாலியர்.Jorge வேதியில் துறையில் பட்டம் பெற்றபின்1958ம் ஆண்டு தனது 22வது வயதில் இயேசு சபையில் சேர்ந்தார்.
தத்துவ இயலிலும்மனநல இயலிலும் முதுகலைப் பட்டங்கள் பெற்ற இவர்Buenos Airesல் உள்ள Colegio del Salvador என்ற கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினார்.
1969ம் ஆண்டு குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்ட Jorge, 1973ம் ஆண்டு முதல் 1979ம் ஆண்டு முடியArgentina இயேசு சபை மாநிலத்தின் தலைவராகப் பணியாற்றினார்.
1992ம் ஆண்டு Buenos Aires உயர் மறைமாவட்டத்தின் துணை ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்ட இவர்,1998ம் ஆண்டு முதல் அம்மறைமாவட்டத்தின் பேராயராகப் பொறுபேற்றார். திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் 2001ம் ஆண்டு இவரை கர்தினாலாக உயர்த்தினார்.
முதல் முறையாகதென் அமெரிக்கக் கண்டத்திலிருந்து ஒருவர் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இயேசு சபையின் ஆண்டுகள் வரலாற்றில் முதன் முறையாக ஒரு இயேசு சபை துறவி இந்நிலையை அடைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.


2. திருத்தந்தை முதலாம் பிரான்சிஸ் ஆற்றிய முதல் உரை

புதிய திருத்தந்தை முதலாம் பிரான்சிஸ் வத்திக்கான் பசிலிக்காவின் நடுமாடத்தில் தோன்றியவுடன் மக்கள் ஆரவாரித்தனர். அவர் திருத்தந்தையின் வெண்மை நிற உடையில் தோன்றிஅமைதியாக சிறிது நேரம் நின்று கொண்டிருந்தார். பின்னர்மனதிலிருந்து எழுந்த வார்த்தைகளை மக்களுடன் பகிர்ந்து கொண்டார்:அன்பு சகோதர சகோதரிகளேகான்கிளேவ் அவை உரோம் ஆயரைத் தரவேண்டிய கடமையைக் கொண்டிருந்தது. எனது சகோதர கர்தினால்கள் ஏறக்குறைய உலகின் எல்லைக்குச் சென்று தேர்ந்தெடுத்துள்ளதாகத் தெரிகிறது. ஆயினும் நாம் இங்கே இருக்கிறோம். உங்களின் வரவேற்புக்கு மிக்க நன்றி. உரோம் மறைமாவட்டம் தனது ஆயரைப் பெற்றுள்ளது. நமது முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுக்காக முதலில் செபிக்க விரும்புகிறேன். நம் ஆண்டவரும் அன்னை மரியாவும் அவரை ஆசீர்வதிக்குமாறு செபிப்போம்.
இவ்வாறு சொன்னபின்இயேசு சொல்லிக்கொடுத்த வானகத்தந்தையே என்ற செபத்தையும் அருள்நிறைந்த மரியே செபத்தையும் சொன்னார். இப்போது ஆயரும் மக்களும் சேர்ந்து நடக்கும் பயணத்தில்உரோம் திருஅவையின் பயணத்தில் பிறரன்பிலும் சகோதரத்துவத்திலும் நடப்போம். எப்போதும் ஒருவர் மற்றவருக்காகச் செபிப்போம். உலகுக்காகச் செபிப்போம். நான் உங்களுக்கு ஆசீர் கொடுக்க விரும்புகிறேன். அதற்கு முன்னதாகஇன்று உங்களிடம் ஒன்று கேட்கிறேன். முதலில் ஆயராகிய நான் உங்களை ஆசிர்வதிக்கும் முன்னர்ஆண்டவர் என்னை ஆசீர்வதிக்குமாறு நீங்கள் எனக்காகச் செபிக்குமாறு கேட்கிறேன்.
இவ்வாறு கூறிய திருத்தந்தை முதலாம் பிரான்சிஸ், சிறிதுநேரம் அமைதியாக தலைகவிழ்ந்து நின்று மக்களின் செப அலைகளை ஏற்றுக்கொண்டார்.  பின்னர் மக்களிடம்இப்போது உங்களுக்கும், உலகினர் அனைவருக்கும்நன்மனம் கொண்ட அனைத்து ஆண்களுக்கும் பெண்களுக்கும் எனது ஆசீரை அளிக்கிறேன் என்று சொல்லி   ஊருக்கும் உலகுக்குமான Urbi et Orbi” ஆசீரை அளித்தார்.
பின்னர் மீண்டும் உங்களின் வரவேற்புக்கு மிக்க நன்றி. எனக்காகச் செபியுங்கள். விரைவில் சந்திப்போம். நாளை அன்னைமரியாவிடம் சென்று செபிக்க விரும்புகிறேன். ஏனெனில் அவர் உரோமையைப் பாதுகாத்து வருகிறார். எல்லாருக்கும் நல்ல இரவு என்று சொல்லி மக்களிடமிருந்து விடைபெற்றார். மக்கள் தொடர்ந்துViva il Papa திருத்தந்தை வாழ்க என்று சப்தமாகச் சொல்லிபாடிக்கொண்டே இருந்தனர்.

Wednesday, March 13, 2013

மனிதர் 150 ஆண்டுகள் வாழ்வதற்கான மருந்து கண்டுபிடிப்பு


மார்ச்,12,2013. மனிதர் முதிர்ச்சியடைவதால் ஏற்படும் நடுக்கம்மறதிமுகச்சுருக்கம் போன்றவற்றிலிருந்து பாதுகாத்து இளமையை நீட்டிக்கச் செய்யும் மருந்தை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
சிவப்பு திராட்சை இரசத்தில் காணப்படும் Resveratrol என்ற வேதிப்பொருள் இதற்கு நல்ல மாற்றாக இருக்கமுடியும் என்று அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
மனிதரின் உடலிலுள்ள மூப்பை நீக்கக்கூடிய ஒருவித செரிமானப்பொருள்இந்த வேதிப்பொருளிலுள்ள மாத்திரைகள் கொண்டு தூண்டிவிடுவதன் மூலம்மனிதர் வயதாகும் தன்மையை நீக்கி 150 ஆண்டுகாலம் வாழமுடியும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மேலும்இந்த மருந்துகள் சாதாரண மருந்துகளைப்போல் பக்கவிளைவுகளை ஏற்படுத்தாது20க்கும் மேற்பட்ட நோய்களை குணப்படுத்தக்கூடியதாக இருக்கும் என்றும்இன்னும் ஆண்டுகளில் இது சாத்தியப்படலாம் எனவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
முதுமை நீக்கும் வழிமுறைகளில் செய்யப்படும் இரத்தப் பரிசோதனையில் ஒருவருக்கு ஏற்படும் மறதிகூட ஆரம்பகாலத்திலேயே கண்டறியப்பட்டு குணப்படுத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக ஆய்வாளர்கள் உறுதி அளித்துள்ளனர்.

Saturday, March 2, 2013

வரவிருக்கும் திருத்தந்தைக்காகச் செபம்

மார்ச் 01,2013. இவ்வியாழன் உள்ளூர் நேரம் இரவு 8 மணியிலிருந்து திருப்பீடம் திருத்தந்தையின்றி காலியாக இருக்கும்வேளைபுதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்க எடுக்கப்பட்டுவரும் முயற்சிகளுக்கு  உலகக் கத்தோலிக்கர் செப வழிபாடுகளை நடத்தத் தொடங்கியுள்ளனர்.
வரவிருக்கும் திருத்தந்தைக்காகவும்அவரைத் தேர்ந்தெடுக்கும் கர்தினால்கள் அவைக்காகவும் வியட்னாம் கத்தோலிக்கர் இவ்வெள்ளிக்கிழமையிலிருந்து செபம் செய்யத் தொடங்கியுள்ளனர் என்று அந்நாட்டின் Saigonபேராயர் கர்தினால் Jean-Baptiste Phạm Minh Mẫn கூறினார்.
கர்தினால் Phạm Minh Mẫn வியட்னாம் கத்தோலிக்கருக்கு விடுத்துள்ள அழைப்பையொட்டிஅந்நாட்டின் குருக்களும் துறவிகளும் பொதுநிலையினரும் சிறப்புத் திருப்பலிகளிலும் கூட்டங்களிலும் கலந்து கொண்டு வருகின்றனர் என்று ஆசியச் செய்தி நிறுவனம் கூறியது.
திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் கான்கிளேவ் என்ற கர்தினால்கள் அவையில் கலந்து கொள்ளவிருக்கும் 115 கர்தினால்களுள் வியட்னாம் கர்தினால் Phạm Minh Mẫnம் ஒருவர்.

திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களது பதவி விலகல் குறித்த தபால்தலை

மார்ச்01,2013. முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் பாப்பிறைப்பணியின் நிறைவைக் குறிக்கும் சிறப்புத் தபால்தலையை வத்திக்கான் தபால்நிலையம் வழங்கி வருகிறது.
திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் வாழ்த்தும் கரங்களும், வத்திக்கான் பசிலிக்காவும் அதில் உள்ளன. “திருத்தந்தை 16ம் பெனடிக்ட் பாப்பிறைப் பணியிலிருந்து விலகுகிறார், வத்திக்கான் தபால் 28.2.2013” என இலத்தீனில் அதில் எழுதப்பட்டுள்ளது.
மேலும், திருப்பீடம் திருத்தந்தையின்றி காலியாக இருப்பதைக் குறிக்கும் Sede Vacante தபால்தலைகளும் இவ்வெள்ளி முதல் வத்திக்கான் தபால்நிலையத்தில் விற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, February 28, 2013

Tuesday, February 26, 2013

திருத்தந்தை பணிஓய்வு நேரடி ஒளிபரப்பு


அன்பு நெஞ்சங்களே,
பிப்.26. 2013. திருத்தந்தை ஒருவர் பணிஓய்வு பெறுவது என்பது ஏறத்தாழ 600 ஆண்டுகளுக்குப்பின் தற்போது இடம்பெறுகிறது. இம்மாதம் 28ம் தேதி மாலை பணி ஓய்வுபெறும் நம் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்27ம் தேதி புதனன்று உரோம் நகர் தூய பேதுரு வளாகத்தில் மக்களை இறுதிமுறையாகச் சந்திக்கிறார். 28ம் தேதி திரு அவையின் கர்தினால்களைச் சந்தித்து உரையாடியபின், அன்று மாலை 5 மணியளவில்  தன் தலைமைப்பொறுப்பிலிருந்து விடைபெற்று திருத்தந்தையர்களின் காஸ்தெல் கந்தோல்ஃபோ கோடை விடுமுறை இல்லத்திற்குச் செல்கிறார். இந்த புதனும் வியாழனும் இடம்பெறும் திருத்தந்தையின் முக்கிய நிகழ்வுகளை நேரடியாக ஒலி-ஒளி வடிவில் உங்களுக்கு வழங்குகிறது வத்திக்கான் வானொலி. கீழேயுள்ள இணைப்பின் வழி உங்களுக்கு எம் நேரடி ஒளிபரப்பு வந்தடையும்.
நேரடி ஒளிபரப்பு நேரங்கள் –
பிப்ரவரி 27. புதன் - உரோம் நேரம் காலை 10.25 முதல் 12.00 வரை (இந்திய நேரம் மாலை 2.55 முதல் 4.30 வரை)
பிப்ரவரி 28. வியாழன் உரோம் நேரம் மாலை 4.30 முதல் 6.30 வரை (இந்திய நேரம் இரவு 9.00 முதல் 11.00 வரை)

Tuesday, February 12, 2013

திருத்தந்தை அறிக்கை


பாப்பிறை பதவியிலிருந்து ஓய்வுபெறுவதற்கான விருப்பத்தை தெரிவித்து திருத்தந்தை அறிக்கை
பிப்.,2013. இம்மாதம் 28ம் தேதியிலிருந்து பாப்பிறை பதவியிலிருந்து ஓய்வுபெறுவதற்கான விருப்பத்தைத் தெரிவித்து இத்திங்களன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
முதுமை காரணமாக திருத்தந்தைக்குரிய பணிகளைச் சரியாக ஏற்று நடத்தமுடியாத நிலையில் இம்முடிவைத் தான் எடுத்துள்ளதாகக் கூறியுள்ள பாப்பிறை2005ம் ஆண்டு ஏப்ரல் 19ம் நாள் கர்தினால்கள் அவையால் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட இப்பொறுப்பிலிருந்து இம்மாதம் 28ம் தேதி உரோம் நேரம் இரவு 8 மணியிலிருந்து பணிஓய்வு பெறுவதாக அவ்வறிக்கையில் கூறியுள்ளார். அதன்பின் கர்தினால்கள் அவை கூடி புதிய திருத்தந்தையைத் தேர்ந்தடுக்கும் எனவும் அதில் தெரிவித்துள்ளார் பாப்பிறை.
இந்தப் பாப்பிறை பணியின்போது தன்மீது காட்டப்பட்ட அன்பிற்கு நன்றி கூறுவதாகவும்,குறைபாடுகளுக்காக மன்னிப்பை வேண்டுவதாகவும் மேலும் தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் பாப்பிறை. தன் இறுதிக் காலத்தில்செபத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு வாழ்வு மூலம் திருஅவைக்குச் சேவையாற்ற உள்ளதாகவும்தனது செய்தியின் இறுதியில் கூறியுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.