மார்ச்,12,2013. மனிதர் முதிர்ச்சியடைவதால் ஏற்படும் நடுக்கம், மறதி, முகச்சுருக்கம் போன்றவற்றிலிருந்து பாதுகாத்து இளமையை நீட்டிக்கச் செய்யும் மருந்தை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
சிவப்பு திராட்சை இரசத்தில் காணப்படும் Resveratrol என்ற வேதிப்பொருள் இதற்கு நல்ல மாற்றாக இருக்கமுடியும் என்று அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
மனிதரின் உடலிலுள்ள மூப்பை நீக்கக்கூடிய ஒருவித செரிமானப்பொருள், இந்த வேதிப்பொருளிலுள்ள மாத்திரைகள் கொண்டு தூண்டிவிடுவதன் மூலம், மனிதர் வயதாகும் தன்மையை நீக்கி 150 ஆண்டுகாலம் வாழமுடியும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மேலும், இந்த மருந்துகள் சாதாரண மருந்துகளைப்போல் பக்கவிளைவுகளை ஏற்படுத்தாது, 20க்கும் மேற்பட்ட நோய்களை குணப்படுத்தக்கூடியதாக இருக்கும் என்றும், இன்னும் 5 ஆண்டுகளில் இது சாத்தியப்படலாம் எனவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
முதுமை நீக்கும் வழிமுறைகளில் செய்யப்படும் இரத்தப் பரிசோதனையில் ஒருவருக்கு ஏற்படும் மறதிகூட ஆரம்பகாலத்திலேயே கண்டறியப்பட்டு குணப்படுத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக ஆய்வாளர்கள் உறுதி அளித்துள்ளனர்.
No comments:
Post a Comment