மார்ச் 01,2013. இவ்வியாழன் உள்ளூர் நேரம் இரவு 8 மணியிலிருந்து திருப்பீடம் திருத்தந்தையின்றி காலியாக இருக்கும்வேளை, புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்க எடுக்கப்பட்டுவரும் முயற்சிகளுக்கு உலகக் கத்தோலிக்கர் செப வழிபாடுகளை நடத்தத் தொடங்கியுள்ளனர்.
வரவிருக்கும் திருத்தந்தைக்காகவும், அவரைத் தேர்ந்தெடுக்கும் கர்தினால்கள் அவைக்காகவும் வியட்னாம் கத்தோலிக்கர் இவ்வெள்ளிக்கிழமையிலிருந்து செபம் செய்யத் தொடங்கியுள்ளனர் என்று அந்நாட்டின் Saigonபேராயர் கர்தினால் Jean-Baptiste Phạm Minh Mẫn கூறினார்.
கர்தினால் Phạm Minh Mẫn வியட்னாம் கத்தோலிக்கருக்கு விடுத்துள்ள அழைப்பையொட்டி, அந்நாட்டின் குருக்களும் துறவிகளும் பொதுநிலையினரும் சிறப்புத் திருப்பலிகளிலும் கூட்டங்களிலும் கலந்து கொண்டு வருகின்றனர் என்று ஆசியச் செய்தி நிறுவனம் கூறியது.
திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் கான்கிளேவ் என்ற கர்தினால்கள் அவையில் கலந்து கொள்ளவிருக்கும் 115 கர்தினால்களுள் வியட்னாம் கர்தினால் Phạm Minh Mẫnம் ஒருவர்.
No comments:
Post a Comment