Friday, May 31, 2013

KBA வாழ்த்துக்கள்

பத்தாம் வகுப்பு தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்றமைக்கு

(ரபேல் - மேரி செலஸ்டின் ராணி) அருள் ராஜ் - 474
(டைட்டஸ் - மேரி நேஸ்பல்) ஆட்லின் டைட்டஸ் - 470

Sunday, May 19, 2013

திருத்தந்தை பிரான்சிஸ் : பிறரது வாழ்வில் தலையிடும் சோதனையைக் கிறிஸ்தவர்கள் மேற்கொள்ள வேண்டும்


திருத்தந்தை பிரான்சிஸ் : பிறரது வாழ்வில் தலையிடும் சோதனையைக் கிறிஸ்தவர்கள் மேற்கொள்ள வேண்டும் 

மே,18,2013. திருஅவையில் எவ்வளவு வீண்பேச்சுக்கள் பேசப்படுகின்றனகிறிஸ்தவர்களாகிய நாம் பயனில்லாதப் பேச்சுக்களை எப்படி பேசுகிறோம்தவறான தகவல்பெயரைக் கெடுத்தல், அவதூறு ஆகிய மூன்று கூறுகளை இந்த நடத்தைக் கொண்டுள்ளதுஇவை மூன்றுமே பாவங்கள் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
யோவானைக் கண்டதும் பேதுரு இயேசுவிடம்இவருக்கு என்ன ஆகும் என்று கேட்டதற்கு இயேசுஅது பற்றி உனக்கு என்ன எனப் பேதுருவிடம் கேட்கும் இந்நாளின் நற்செய்தி வாசகத்தை மையமாக வைத்து மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ், இந்நிகழ்வை வைத்து இக்காலக் கிறிஸ்தவர்களுக்கு ஓர் எச்சரிப்பையும் முன்வைத்தார்.   
இயேசுவோடு அன்பு உரையாடலை மேற்கொண்ட பேதுருவின் உரையாடல் திசை மாறுகிறது, பிறரது வாழ்வில் தலையிடும் சோதனையால் அவர் துன்புறுகிறார் என்றுரைத்த திருத்தந்தை, பேதுரு உட்பட்ட இரு சோதனைகள் குறித்து விளக்கினார்.
ஒருவரைப் பிறரோடு ஒப்பிட்டுப் பேசுதல்புறணி பேசுதல் ஆகிய இரு சோதனைகள் குறித்து இச்சனிக்கிழமை காலையில் புனித மார்த்தா இல்லத்தில் நிகழ்த்திய திருப்பலி மறையுரையில் விளக்கிய திருத்தந்தைஒருவரைப் பிறரோடு ஒப்பிட்டுப் பேசும்போது அது கசப்புணர்விலும்பொறாமையிலும்கூடக் கொண்டுபோய் விடுகின்றது,பொறாமை கிறிஸ்தவச் சமூகத்தை அரித்து விடுகின்றது என்று கூறினார்.
அடுத்து,  புறணி பேசுதல். இது முதலில் அறிவார்ந்த வழியில் தொடங்கி பின்னர் மோசமாக உணரும் நிலையில் விட்டுவிடுகின்றதுதிருஅவையில் நாம் அனைவரும் புறணி பேசுகிறோம்இது ஒருவர் ஒருவரைப் புண்படுத்துகின்றதுஇது ஒருவர் மற்றவரை வீழ்த்த விரும்புவதுபோல் உள்ளது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மீட்பு என்பது பிறரோடு ஒப்பிடுவதிலோவீண்பேச்சுப் பேசுவதிலோ இல்லைமாறாக, இயேசுவைப் பின்செல்லுவதில் இருக்கின்றதுஎனவே நாம் பிறரின் வாழ்வில் தலையிடாதிருக்கும் வரத்தை இயேசுவிடம் கேட்போம் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆஷா மேகலா - விஜய் ஆனந்த் - ஆண் குழந்தை

ஆஷா மேகலா - விஜய் ஆனந்த் தம்பதியருக்கு ஒரு ஆண் குழந்தையை  ஆண்டவர் வழங்கியுள்ளார். தாயும் சேயும் நலமுடன் உள்ளனர். - KBA
Asha mekala - Vijay Anand, a male child, the Lord has given to the couple. Mother and baby are fine. - KBA

Thursday, May 9, 2013

மறைந்திருக்கும் கடற்கரை (Hidden beach marieta islands)




மெக்சிகோ நாட்டின் Puerto Vallarta பசிபிக் பெருங்கடற்பகுதியிலுள்ள சிறிய Marieta தீவுகளில் பூமிக்கு கீழே ஒரு கடற்கரை மறைந்திருக்கின்றது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற எரிமலை வெடிப்புகளால் இந்தMarieta தீவுகள் உருவாகியுள்ளன. இந்த Marieta தீவுகளிலுள்ள தண்ணீர்க் குகைப்பாதை வழியாக ஏறக்குறைய 40 முதல் 50 அடிவரை நீந்திச் சென்றால் அங்கு மறைந்திருக்கும் கடற்கரையைக் காணமுடியும். இந்தக் குகைப்பாதையில் பாறைக்கும் தண்ணீருக்கும் இடையே ஏறக்குறைய 5 முதல் 6 அடி உயர இடைவெளிதான் இருக்கிறது. இப்பாதை தண்ணீருக்குக் கீழேயிருக்கும் சுரங்கப்பாதை அல்ல. சுற்றிலும் பாறைகளை மதில்சுவர் போன்று கொண்டிருந்துஅவற்றுக்குள் அமைந்துள்ள இந்தக் கடற்கரை பசிபிக் பெருங்கடலுடன் தொடர்பு கொண்டுள்ளது. இங்கு ஏராளமான பவளப்பாறை மீன்கள் உட்பட 103 வகையான உயிரினங்கள் தெளிந்த நீலநிற நீரில் அங்குமிங்கும் அலைவது பார்ப்பவர் கண்களுக்கு மிக அழகாகத் தெரிகின்றன. சில நேரங்களில் திமிங்கிலங்களும் அப்பக்கம் வருகின்றன. இந்த உயிரினங்கள் அனைத்தும் எழுப்பும் இசை உண்மையிலேயே மிக இனிமையாக இருப்பதாகச் சொல்லப்படுகின்றது. Puerto Vallarta விலிருந்து மேற்கிலும்வடமேற்கிலும் ஏறக்குறைய ஒரு மணிநேரம் படகில் சென்றால் இந்த Marieta தீவுகளை அடையலாம். இத்தீவுகளில் மனிதர் யாரும் வாழாததால்இதனை ஒரு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு1900களின் தொடக்கத்தில் மெக்சிகோ அரசு இங்கு இராணுவ நடவடிக்கைகளை நடத்தியது. இப்பரிசோதனைகளின்போது நடத்தப்பட்ட பெருமளவான வெடிகள் மற்றும் குண்டுவெடிப்புகளால் இத்தீவுகளில் நம்புதற்கரிய பல குகைகளும் பாறைகளும் உருவாகியுள்ளன. 1960களின் இறுதியில் அறிவியலாளர் Jacques Cousteau என்பவரின் தூண்டுதலால் அனைத்துலக அளவில் எழுந்த கடும் கண்டனங்களுக்குப் பின்னர் மெக்சிகோ அரசு இத்தீவுகளை தேசியப் பூங்காவாக அறிவித்துமீன்பிடித்தல்,வேட்டையாடுதல் உட்பட மனிதரின் அனைத்துச் செயல்பாடுகளுக்கு எதிராகப் பாதுகாத்து வருகிறது.

சூரிய ஒளி நமது உடலுக்கு விளைவிக்கும் கெடுதலை விட, நன்மைகளே அதிகம்



மே,08,2013. சூரிய ஒளி நமது உடலுக்கு விளைவிக்கும் கெடுதலை விடநன்மைகளே அதிகம் என்று அண்மைய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
Edinburgh பல்கலைக் கழகம் மேற்கொண்ட ஓர் ஆய்வின் அடிப்படையில்சூரிய ஒளிக்கு உட்படுத்தப்படும் உடலில்,இரத்த அழுத்தம் குறைந்துஇதயம் தொடர்பான குறைகள் நீங்க வழி உண்டு என்று தெரிய வந்துள்ளது.
சூரிய ஒளியிலிருந்து உடலில் விழும் Ultra Violet அதாவதுபுற நீலக் கதிர்கள்வெளிப்படுத்தும் ஒருவகை வேதியல் மாற்றம் உடலில் உள்ள இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது என்றும்இதனால் மாரடைப்பு நோயைத் தடுக்க முடியும் என்றும்அதேநேரம்உடலில் D வைட்டமின் அதிகமாகிறது என்றும் இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இப்புதன் முதல் சனிக்கிழமை முடிய Edinburgh நகரில் நடைபெறும் அகில உலக தோல் நிபுணர்கள் கருத்தரங்கில் இந்த ஆய்வின் முடிவுகள் வெளியிடப்படும் என்று BBC செய்தி கூறியுள்ளது.

கிறிஸ்தவர்கள் பாலங்களைக் கட்ட அழைக்கப்பட்டுள்ளோம் சுவர்களைக் கட்டுவதற்கு அல்ல - திருத்தந்தை



மே,08,2013. கிறிஸ்தவர்கள் யாரையும் கண்டனம் செய்யாமல்அனைவரையும் இணைக்கும் பாலங்களைக் கட்ட அழைக்கப்பட்டுள்ளோம்சுவர்களைக் கட்டுவதற்கு அல்ல என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இப்புதன் காலைத் திருப்பலியில் கூறினார்.
புனித மார்த்தா இல்லத்தில் அமைந்துள்ள சிற்றாலயத்தில்வத்திக்கான் நீதித் துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு திருப்பலி ஆற்றிய திருத்தந்தையுடன்கர்தினால் Francesco Coccopalmerio அவர்களும் கூட்டுத் திருப்பலி ஆற்றினார்.
அரயோப்பாகு மன்றத்தில் புனித பவுல் அடியார் இறைவனை எடுத்துரைத்ததைக் கூறும் திருத்தூதர் பணிகள் பகுதியை தன் மறையுரையின் மையப்பொருளாக்கிய திருத்தந்தையாரையும் புறக்கணிக்காமல்அனைவருக்கும் உண்மையை எடுத்துரைக்க வேண்டும் என்பதை பவுல் அடியார் கற்றுத் தருகிறார் என்று குறிப்பிட்டார்.
பாவிகள்வரிதண்டுவோர்திருச்சட்ட அறிஞர் என்று பலரையும் சந்தித்து உரையாடிய கிறிஸ்துவைப் போலவே,புனித பவுல் அடியாரும் செயல்பட்டார் என்பதைக் கூறியத் திருத்தந்தைஇதுவே கிறிஸ்துவர்களின் அழைப்பு என்றும் எடுத்துரைத்தார்.
உண்மை என்பது அனைவரையும் ஒருங்கிணைக்கும் தளமாக அமையவேண்டுமே தவிரமக்களைப் பிரிக்கும் கருவியாக இருக்க முடியாது என்பதை திருத்தந்தை தன் மறையுரையில் வலியுறுத்தினார்.

Wednesday, May 1, 2013

மனிதர் வாழ இரண்டு புதிய கோள்கள்



இப்பூமியிலிருந்து 1,200 ஒளி ஆண்டுகள் அல்லது 7,08,000 டிரில்லியன் மைல்கள் தூரத்தில் மனிதர் வாழ்வதற்கு ஏற்ற இரண்டு கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று அமெரிக்க ஐக்கிய நாட்டு நாசா விண்வெளி ஆய்வு மையம் அறிவித்துள்ளது. பூமியைப் போலவே இருக்கும் இவ்விரண்டு கோள்களுக்கு கெப்லர் 62eகெப்லர் 62fஎனப் பெயரிட்டுள்ளது நாசா மையம். கெப்லர் 62e பூமியைவிட 60 விழுக்காடும்கெப்லர் 62fபூமியைவிட 40 விழுக்காடும் பெரியன. பூமியைப் போன்று உள்ள இவ்விரு கோள்களிலும் உயிரினங்கள் வாழத் தகுதியுடைய தட்பவெப்பநிலை உள்ளது. அக்கோள்கள் சூரியனைவிடச் சிறியதாகவும்மங்கலாகவும் காணப்படுகின்றன. அவை பூமியில் இருந்து 1,200 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளன என நாசா ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. விண்வெளியை ஆய்வு செய்வதற்கென 2009ம் ஆண்டு மார்ச் மாதத்தில் நாசா ஆய்வு மையம் அனுப்பியுள்ள கெப்லர் 62 என்ற விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள அதிசக்தி வாய்ந்த டெலஸ்கோப் கருவி இதுவரை அனுப்பியுள்ள புகைப்படங்களால் அறிவியலாளர்கள் 115 கோள்களைக் கண்டறிந்துள்ளனர். சூரிய மண்டலத்துக்கு வெளியே ஏறக்குறைய ஆயிரம் கோள்கள் பற்றியும் அவர்கள் அறியவந்துள்ளனர் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன. விண்மீன்கள், கோளங்கள்இப்பிரபஞ்சம் ஆகியவை குறித்த விண்வெளியியல் ஆய்வுகள் குறைந்தது 5000 ஆண்டு பழமை கொண்டவை.

மே தினம்... Mayday



மே மாதம் முதல் நாள் என்றதும் நினைவில் தோன்றுவது மே தினம் என்று வழங்கப்படும் அகில உலகத் தொழிலாளர் நாள்.
18ம் நூற்றாண்டின் இறுதியில் தொழில் புரட்சி தோன்றியதுபல இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனால்மனிதர்கள் செய்யும் தொழில் குறையும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால்தொழிலதிபர்களின் பேராசையால் மனிதர்களும் இயந்திரங்களாய் மாற வேண்டிய கட்டாயம் உருவானது. இயந்திரங்களைத் தொடர்ந்து பயன்படுத்தவும்அவற்றைப் பராமரிக்கவும் தொழிலாளிகள் ஒவ்வொரு நாளும் 15 அல்லது 16 மணி நேரம் உழைக்க வேண்டியதாயிற்று.
ஒவ்வொரு தொழிலாளியும் நாளொன்றுக்கு 8 மணி நேரம் மட்டுமே வேலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்திபல நாடுகளில் போராட்டங்கள் எழுந்தன. அவற்றில் கிடைத்த வெற்றி,தோல்விஉயிர் தியாகம் ஆகிய அனைத்தையும் கொண்டாட மே தினம் உருவானது.
Mayday என்ற வார்த்தை ஆபத்து நேரத்தில் அடுத்தவர் உதவியைத் தேடும் ஓர் அடையாளமாகப் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாககடல் பயணத்தின்போதுஒரு கப்பலுக்கு ஆபத்து உருவானால்,அருகிலுள்ள மற்ற கப்பல்களுக்கு 'Mayday…Mayday' என்ற செய்தி அனுப்பப்படும். இந்த வார்த்தைபிரெஞ்ச் மொழியில் பயன்படுத்தப்படும் 'M'aider' என்ற சொல்லிலிருந்து உருவானது. 'M'aider' என்றால் 'help me' அதாவது, 'எனக்கு உதவி செய்யுங்கள்என்று பொருள்.