Thursday, February 20, 2014

குமரி மாவட்ட ஆட்சியர் மற்றும் ...... மேலான முயற்சியால் நூற்றாண்டுகளை

நன்றி நன்றி எமது நெஞ்சார்ந்த நன்றி


எமது குமரி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும், தமிழ் நாடு மின்சார வாரிய அதிகாரிகளுக்கும், காப்புக்காடு ஆலமர பாதுகாப்பு குழு தலைவர், செயலர் மற்றும் உறுப்பினர்களுக்கும், தொல்காப்பியர் கழக நண்பர்களுக்கும், எமது உடன்பிறப்புகளான காப்புக்காடு மக்களுக்கும்...
உங்களது மேலான முயற்சியால் நூற்றாண்டுகளை கடந்த இந்த காப்புக்காடு சந்திப்பிலுள்ள ஆலமரம் இன்று தனக்கு நேரவிருந்த இடர் (வெட்டப்பட இருந்த நிலை) களைந்து புத்துயிர் பெற்றுள்ளது.
(இதனால் தானோ என்னவோ இன்று மாலை மழையும் பெய்தது என்ற  எண்ணம் எமக்கு)

மேலும் காண்க:  https://www.facebook.com/photo.php?fbid=348897828566602&set=a.254371648019221.54736.250043111785408&type=1&theater

Wednesday, October 30, 2013

"சிறு குழந்தைகளை என்னிடம் வர விடுங்கள்" - திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செயல்களில்

நம்பிக்கை ஆண்டை கொண்டாடும் விதமாக ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த கத்தோலிக்க குடும்பங்கள் மத்தியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வீற்றிருக்க, கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த சிறுவன் ஒருவன் திருத்தந்தையை உற்று நோக்கி அருகில் செல்கிறான்... 
சுமார் 80 க்கு மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகளை சந்திக்க வரும்போது திருத்தந்தைக்கு தொந்தரவு செய்யாமல் இருக்க கார்டினல்கள் பலர் அந்த சிறுவனை அவன் இருப்பிடத்திற்கு அழைத்து செல்ல முற்பட.....




அந்த சிறுவன் இன்னமும் தொடர்கிறான் .....



 திருத்தந்தை உரையாற்றும் போது இன்னமும் அங்கேயே இருந்து அங்கிருந்து போக மறுத்து அவருடைய காலை கட்டி பிடித்தபடி நிற்க....



அவர் அந்த சிறுவனை தன் இருக்கையில் அமர வைத்து பின் தனது உரையை தொடர்கிறார்.

ஞாயிறு திருப்பலிகளில், கோவிலுக்குள் சேட்டை செய்யும் சிறுவர்களை முறைப்பதும், ஒன்றும் அறியாமல் அழும் சிறு குழந்தைகளின் தாய்மார்களை வெளியே செல்ல அதட்டுவதுமாக இருக்கும் அருட்பணியாளர்களை மட்டுமே பார்த்து வந்த நமக்கு இது ஒரு அதிர்ச்சி மட்டுமல்ல மாறாக பேரதிர்ச்சியும் கூட....

இப்படி ஒரு திருத்தந்தை நமக்கு கிடைத்தது ஒரு வரபிரசாதம் எனலாம்.

ஒரே மரத்தில் 250 வகையான ஆப்பிள்கள்: ஜெர்மனியில் சாதனை


ஒரே மரத்தில் 250 வகையான ஆப்பிள்களை காய்க்க செய்யும் வினோத மரத்தை வளர்த்துஜெர்மன் நாட்டைச் சேர்ந்த தோட்டக்கலைஞர் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.
ஜெர்மனியின் West Sussex பகுதியில் உள்ள Chidham என்ற ஊரைச் சேர்ந்த Paul Barnett என்ற தோட்டக்கலைஞர், 250 வகையான ஆப்பிள்கள் காய்க்கும் வினோத மரம் ஒன்றை தனது தோட்டத்தில் வளர்த்துள்ளார்.
கடந்த 20 வருடங்களாக மிகவும் கவனத்தோடு பல்வேறு வகை ஆப்பிள் மரங்களின் ஒட்டு ரகங்களை வைத்து தனது ஆப்பிள் மரத்தை வளர்த்து வருவதாக Paul Barnett கூறியுள்ளார்.
தற்போது 20 அடி உயரம் வளர்ந்துள்ள இந்த ஆப்பிள் மரத்தில்சமையலுக்கு பயன்படும் Withington Fillbasketஎனப்படும் அமெரிக்க ஆப்பிள் முதல்1908ம் ஆண்டைச் சேர்ந்த Eady’s Magnum போன்ற பல்வேறு வகைகளும் காய்ப்பதாக Paul Barnett பெருமையுடன் தெரிவித்துள்ளார்.
இவரது மரத்தில் காய்க்கும் ஆப்பிள்களை பொதுமக்கள் வந்து ஆர்வத்துடன் பார்த்துவாங்கிசுவைத்து நன்றாக இருப்பதாக பாராட்டுகின்றனர். இந்த மரம் தற்போது ஜெர்மனியில் புகழடைந்து வருகிறது.

காது கேளாதோர் தினம்

காது கேளாதோர் தினம்

ஒலியைக் கேட்பதில் சிரமம் ஏற்படுவதையே காது கேளாமை என்று சொல்கிறோம். உலக மக்கள் தொகையில் 5 விழுக்காட்டுக்கு அதிகமானோர், அதாவது ஏறக்குறைய 36 கோடிப் பேர் காது கேளாதவர்கள். இவர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் வளரும் நாடுகளில் உள்ளனர் எனவும், ஆரம்பத்திலே சிகிச்சை எடுத்துக்கொள்வதன்மூலம் இவர்களில் பாதிப்பேரைக் குணப்படுத்திவிடலாம் எனவும் உலக நலவாழ்வு நிறுவனம் கூறுகிறது. உலகில் ஏறக்குறைய 40  விழுக்காட்டினருக்குத் தங்களின் 65வது வயதில் காது கேளாமை பிரச்சனை ஏற்படுகிறது. மனிதரது காதுசாதாரணமாக 20 ஹெர்ட்ஸிலிருந்து 20 கிலோ ஹெர்ட்ஸ்வரை கேட்கும் திறன் பெற்றது. அதிக ஒலியைக் கேட்பதால்கூட கேட்கும் திறன் பாதிக்கப்படுகிறது. பெற்றோருக்கு இக்குறைபாடு இருப்பின்,குழந்தையையும் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. அடிக்கடி சளி அல்லது தொண்டைவலி ஏற்பட்டாலும் காது கேட்காமல் போகலாம். குழந்தைகளுக்கு காது கேளாமை இருந்தால் உடனே மருத்துவரிடம் சென்று பரிசோதிக்க வேண்டும். இல்லையெனில் இது குழந்தையின் பேச்சுத்திறனையும் பாதிக்கும். கைபேசியின் கதிர்வீச்சு காரணமாகக்கூட கேட்கும் திறன் பாதிப்படைகிறது. காதில் அழுக்கைச் சுத்தம் செய்கிறோம் என்ற பேரில் கண்ட கண்ட குச்சியைப் பயன்படுத்துவதுகாதின் கேட்கும் திறனைப் பாதிக்கும்.
1951ம் ஆண்டு செப்டம்பரில், முதல் அனைத்துலக காது கேளாதோர் மாநாடு நடத்தப்பட்டது. 1958ம் ஆண்டில் அனைத்துலக காது கேளாதோர் தினம் தொடங்கப்பட்டது. பின் இது செப்டம்பர் கடைசி வாரம் காது கேளாதோர் வாரமாகவும்செப்டம்பர் கடைசி ஞாயிறு அனைத்துலக காது கேளாதோர் தினமாகவும் மாற்றப்பட்டது.
காது கேளாதோரிடம் பேசும்போது கவனிக்க வேண்டியவை.....
காது கேட்கவில்லை என்ற உணர்வை அவர்களுக்கு ஒருபோதும் ஏற்படுத்தக் கூடாது. இதை அல்லது அதை எப்படிச் செய்தாய் போன்ற வார்த்தைகளை அவர்களிடம் கேட்கக் கூடாது.
அவர்களுக்கு வணக்கம் சொல்லும்பொழுது கைகளைக் குலுக்காமல் மெதுவாக அணைத்துச் சொல்வது நல்லது.
நாம் உணருவதை அவர்கள் புரிந்துகொள்ளும் வகையில் சில அடிப்படையான சைகை மொழியைத் தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது.
காது கேளாதோர்க்கு சரிநிகர் மரியாதையும் மதிப்பும் கொடுக்க வேண்டும். மற்ற மக்கள் மத்தியில் அவர்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.