Sunday, March 9, 2014
Sunday, March 2, 2014
Thursday, February 20, 2014
குமரி மாவட்ட ஆட்சியர் மற்றும் ...... மேலான முயற்சியால் நூற்றாண்டுகளை
நன்றி நன்றி எமது நெஞ்சார்ந்த நன்றி
எமது குமரி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும், தமிழ் நாடு மின்சார வாரிய அதிகாரிகளுக்கும், காப்புக்காடு ஆலமர பாதுகாப்பு குழு தலைவர், செயலர் மற்றும் உறுப்பினர்களுக்கும், தொல்காப்பியர் கழக நண்பர்களுக்கும், எமது உடன்பிறப்புகளான காப்புக்காடு மக்களுக்கும்...
உங்களது மேலான முயற்சியால் நூற்றாண்டுகளை கடந்த இந்த காப்புக்காடு சந்திப்பிலுள்ள ஆலமரம் இன்று தனக்கு நேரவிருந்த இடர் (வெட்டப்பட இருந்த நிலை) களைந்து புத்துயிர் பெற்றுள்ளது.
(இதனால் தானோ என்னவோ இன்று மாலை மழையும் பெய்தது என்ற எண்ணம் எமக்கு)
மேலும் காண்க: https://www.facebook.com/photo.php?fbid=348897828566602&set=a.254371648019221.54736.250043111785408&type=1&theater
Monday, December 2, 2013
Thursday, November 28, 2013
Thursday, November 21, 2013
Wednesday, October 30, 2013
"சிறு குழந்தைகளை என்னிடம் வர விடுங்கள்" - திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செயல்களில்
நம்பிக்கை ஆண்டை கொண்டாடும் விதமாக ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த கத்தோலிக்க குடும்பங்கள் மத்தியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வீற்றிருக்க, கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த சிறுவன் ஒருவன் திருத்தந்தையை உற்று நோக்கி அருகில் செல்கிறான்...
சுமார் 80 க்கு மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகளை சந்திக்க வரும்போது திருத்தந்தைக்கு தொந்தரவு செய்யாமல் இருக்க கார்டினல்கள் பலர் அந்த சிறுவனை அவன் இருப்பிடத்திற்கு அழைத்து செல்ல முற்பட.....
அந்த சிறுவன் இன்னமும் தொடர்கிறான் .....
திருத்தந்தை உரையாற்றும் போது இன்னமும் அங்கேயே இருந்து அங்கிருந்து போக மறுத்து அவருடைய காலை கட்டி பிடித்தபடி நிற்க....
அவர் அந்த சிறுவனை தன் இருக்கையில் அமர வைத்து பின் தனது உரையை தொடர்கிறார்.
ஞாயிறு திருப்பலிகளில், கோவிலுக்குள் சேட்டை செய்யும் சிறுவர்களை முறைப்பதும், ஒன்றும் அறியாமல் அழும் சிறு குழந்தைகளின் தாய்மார்களை வெளியே செல்ல அதட்டுவதுமாக இருக்கும் அருட்பணியாளர்களை மட்டுமே பார்த்து வந்த நமக்கு இது ஒரு அதிர்ச்சி மட்டுமல்ல மாறாக பேரதிர்ச்சியும் கூட....
இப்படி ஒரு திருத்தந்தை நமக்கு கிடைத்தது ஒரு வரபிரசாதம் எனலாம்.
Subscribe to:
Posts (Atom)










