இப்பூமியிலிருந்து 1,200 ஒளி ஆண்டுகள் அல்லது 7,08,000 டிரில்லியன் மைல்கள் தூரத்தில் மனிதர் வாழ்வதற்கு ஏற்ற இரண்டு கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று அமெரிக்க ஐக்கிய நாட்டு நாசா விண்வெளி ஆய்வு மையம் அறிவித்துள்ளது. பூமியைப் போலவே இருக்கும் இவ்விரண்டு கோள்களுக்கு கெப்லர் 62e, கெப்லர் 62fஎனப் பெயரிட்டுள்ளது நாசா மையம். கெப்லர் 62e பூமியைவிட 60 விழுக்காடும், கெப்லர் 62f, பூமியைவிட 40 விழுக்காடும் பெரியன. பூமியைப் போன்று உள்ள இவ்விரு கோள்களிலும் உயிரினங்கள் வாழத் தகுதியுடைய தட்பவெப்பநிலை உள்ளது. அக்கோள்கள் சூரியனைவிடச் சிறியதாகவும், மங்கலாகவும் காணப்படுகின்றன. அவை பூமியில் இருந்து 1,200 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளன என நாசா ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. விண்வெளியை ஆய்வு செய்வதற்கென 2009ம் ஆண்டு மார்ச் மாதத்தில் நாசா ஆய்வு மையம் அனுப்பியுள்ள கெப்லர் 62 என்ற விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள அதிசக்தி வாய்ந்த டெலஸ்கோப் கருவி இதுவரை அனுப்பியுள்ள புகைப்படங்களால் அறிவியலாளர்கள் 115 கோள்களைக் கண்டறிந்துள்ளனர். சூரிய மண்டலத்துக்கு வெளியே ஏறக்குறைய ஆயிரம் கோள்கள் பற்றியும் அவர்கள் அறியவந்துள்ளனர் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன. விண்மீன்கள், கோளங்கள், இப்பிரபஞ்சம் ஆகியவை குறித்த விண்வெளியியல் ஆய்வுகள் குறைந்தது 5000 ஆண்டு பழமை கொண்டவை.
Wednesday, May 1, 2013
மே தினம்... Mayday
மே மாதம் முதல் நாள் என்றதும் நினைவில் தோன்றுவது மே தினம் என்று வழங்கப்படும் அகில உலகத் தொழிலாளர் நாள்.
18ம் நூற்றாண்டின் இறுதியில் தொழில் புரட்சி தோன்றியது; பல இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனால், மனிதர்கள் செய்யும் தொழில் குறையும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், தொழிலதிபர்களின் பேராசையால் மனிதர்களும் இயந்திரங்களாய் மாற வேண்டிய கட்டாயம் உருவானது. இயந்திரங்களைத் தொடர்ந்து பயன்படுத்தவும், அவற்றைப் பராமரிக்கவும் தொழிலாளிகள் ஒவ்வொரு நாளும் 15 அல்லது 16 மணி நேரம் உழைக்க வேண்டியதாயிற்று.
ஒவ்வொரு தொழிலாளியும் நாளொன்றுக்கு 8 மணி நேரம் மட்டுமே வேலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, பல நாடுகளில் போராட்டங்கள் எழுந்தன. அவற்றில் கிடைத்த வெற்றி,தோல்வி, உயிர் தியாகம் ஆகிய அனைத்தையும் கொண்டாட மே தினம் உருவானது.
Mayday என்ற வார்த்தை ஆபத்து நேரத்தில் அடுத்தவர் உதவியைத் தேடும் ஓர் அடையாளமாகப் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக, கடல் பயணத்தின்போது, ஒரு கப்பலுக்கு ஆபத்து உருவானால்,அருகிலுள்ள மற்ற கப்பல்களுக்கு 'Mayday…Mayday' என்ற செய்தி அனுப்பப்படும். இந்த வார்த்தை, பிரெஞ்ச் மொழியில் பயன்படுத்தப்படும் 'M'aider' என்ற சொல்லிலிருந்து உருவானது. 'M'aider' என்றால் 'help me' அதாவது, 'எனக்கு உதவி செய்யுங்கள்' என்று பொருள்.
Monday, April 29, 2013
திருத்தந்தை - நம்மை அடித்துத் துவைக்கக் காத்திருக்கும் துப்புரவுத் தொழிலாளி அல்ல இயேசு
ஏப்.29,2013. ஒப்புரவு அருள்சாதனம் பெறும் இடம், நம் பாவங்கள் தானாகவே சுத்தம் செய்யப்படும் ஓர் உலர் சலவையகம் அல்ல என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
இத்திங்கள் காலை புனித மார்த்தா இல்லத்தில் உள்ள சிற்றாலயத்தில், திருப்பீட மேலாளர்கள் பணியில் ஈடுபட்டிருப்பவருக்குத் திருப்பலி நிகழ்த்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மன்னிப்பதற்குக் காத்திருக்கும் இறைவனை மையப்படுத்தி தன் மறையுரையை வழங்கினார்.
புனித யோவான் எழுதிய முதல் திருமுகத்தில் காணப்படும் "கடவுள் ஒளியாய் இருக்கிறார்; அவரிடம் இருள் என்பதே இல்லை" என்ற வார்த்தைகளை மையமாகக் கொண்டு மறையுரை வழங்கியத் திருத்தந்தை, நம் அனைவரின் வாழ்விலும் இருள் உள்ளது எனினும், நாமும் ஒளியில் வாழ அழைக்கப்பட்டுள்ளோம் என்று எடுத்துரைத்தார்.
நம்மில் இருக்கும் இருளையும், நாம் ஒளிக்குச் செல்லவேண்டும் என்ற தேவையையும் உணராமல் வாழ்வோர் சந்திக்கும் ஆபத்துகளையும் தன் மறையுரையில் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஒப்புரவு அருட்சாதனத்தில் நம்மை அடித்துத் துவைக்கக் காத்திருக்கும் துப்புரவுத் தொழிலாளி அல்ல,இயேசு என்பதைக் கூறியத் திருத்தந்தை, இவ்வருட் சாதனத்தின் வழியாக நம்மை எப்போதும் மன்னிக்கக் காத்திருக்கும் இயேசுவை நாம் திரும்பத் திரும்ப அணுகிச் செல்ல தயங்கக்கூடாது என்பதையும் தன் மறையுரையில் வலியுறுத்தினார்.
இவ்வியாழனன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட Twitter செய்தியில், "இன்று நான் பிறருக்கு ஓர் உதவி செய்துள்ளேன் என்று ஒவ்வொரு நாள் முடிவிலும் நாம் ஒவ்வொருவரும் சொல்ல முடிந்தால்,எவ்வளவு அற்புதமாக இருக்கும்!" என்று கூறியுள்ளார். ஆங்கிலம், இத்தாலியம், பிரெஞ்ச், ஸ்பானியம்,அரேபியம் உட்பட 9 மொழிகளில் @Pontifex எனப்படும் Twitter பக்கத்தில் இச்செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
Saturday, April 27, 2013
பூமியைக் காப்பதில் தனியொருவரின் பங்கு
- பயன்படுத்தும் வாகனத்தை சரியாகப் பராமரித்து, அதிகப் புகையை வெளியிடாமல் பார்த்துக் கொள்ளலாம்.
- பிளாஸ்டிக் பை, பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்திவிட்டு அதனைத் தூக்கி எறியாமல், மறு சுழற்சிக்குப் பயன்படுத்தலாம்.
- வீட்டிலோ, வீட்டுப்பக்கத்திலோ இடம் இருந்தால், மரக்கன்றுகளை நட்டுப் பராமரிக்கலாம்.
- வாங்கிப் போட்டுள்ள இடங்களில் தற்போதைக்கு குடியேற முடியாமல் இருந்தாலும் அவ்விடங்களில் ஒரு சில மரங்களையாவது நடலாம்.
- ஏதாவது ஒரு காரணத்துக்காக ஒரு மரத்தை வெட்ட நேர்ந்தால், அதற்குப் பதிலாக குறைந்தது 5 மரக்கன்றுகளையாவது நட்டு விடலாம்.
- வீட்டில் இருக்கும் மின் விளக்குகளை எல்.இ.டி விளக்குகளாக மாற்றலாம். குண்டுப் பல்புகளின் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்கலாம்.
- தேவையற்ற மின்சாதனப் பயன்பாட்டைத் தவிர்க்கலாம். ஏனெனில் ஒரு யூனிட் மின்சாரத்தை மிச்சப்படுத்துவது, 2 யூனிட் மின்சார உற்பத்திக்குச் சமமாகும்.
- சூரிய ஒளி மூலமாக மின்சாரத்தைத் தயாரித்து இயங்கும் கருவிகளைப் பயன்படுத்தலாம்.
- கணனிகளைப் பயன்படுத்தும்போது, 10 நிமிடத்துக்கு மேல் பயன்படுத்தாமல் இருந்தால், தானாகவே கணனித்திரைகள் ஆப் ஆகும் வகையில் செய்துவிடலாம்.
- தண்ணீரைத் தேவைக்கு அதிகமாகப் பயன்படுத்துவதைக் குறைத்துக் கொள்ளலாம். ஒவ்வொரு சொட்டுத் தண்ணீரையும் காசு கொடுத்து வாங்கியிருந்தால் எவ்வாறு பயன்படுத்துவோமோ அப்படிப் பயன்படுத்தினால் அது நாட்டுக்கு நல்லது.
Monday, April 22, 2013
வருந்துகிறோம்
காப்புக்காடு பகுதியை சார்ந்த செல்வன் சாஜூஅவர்கள் அம்மா திருமதி ஜானசீலம் அவர்கள் இன்று நோயினால் காலமானார்கள். அவரது குடும்பத்தினர்களுடன் சேர்ந்து நாமும் வருந்துகிறோம்
Saturday, April 20, 2013
மரண அறிவிப்பு : விஜய குமார் த/பெ. சுப்பு, (புளி வியாபாரம்) காப்புக்காடு
திரு விஜய குமார் த/பெ. சுப்பு, (புளி வியாபாரம்) காப்புக்காடு அவர்கள் இன்று காலை சாலை விபத்தில் மரணமடைந்தார்கள். அவரது குடும்பத்தார்களுடன் நாமும் வருத்தத்தை பகிர்ந்து கொள்கிறோம்.
Wednesday, April 17, 2013
மனிதர் மட்டுமல்ல... மனித மொழியும் குரங்கிலிருந்தே...
மனிதர்கள் மட்டுமல்ல, அவர்களின் மொழிகளும் குரங்கிலிருந்தே பரிணமித்தன என்பதைத் தெரிவிக்கும் ஆய்வு ஒன்றின் முடிவுகள் அண்மையில் வெளியாகியுள்ளன.
எத்தியோப்பிய காடுகளில் வாழும் பபூன் வகை (baboon) குரங்குக்கு நெருங்கிய பிரிவான கெலாடா வகை (gelada baboon) குரங்குக்கு சொந்தமான சிக்கலான குரல்கள் மனிதர்களின் ஆதிமொழியை ஒத்திருக்கலாம் என்றும்,கெலாடா குரங்கின் ஒலிகள், மனிதர்களிடம் மொழிகள் தோன்றிய விதத்தை விளக்கப் பயன்படும் என்றும் உயிரியல் அறிஞர்கள் நம்புகின்றனர்.
Current Biology எனும் அறிவியல் இதழில் Michigan பல்கலைக்கழகத்தைச் சார்ந்த Thore Bergman என்பவர் மேற்கொண்ட புதிய ஆய்வின் முடிவுகளில் ஒன்றாக, கெலாடா குரங்குகளின் ஒலிகள், மனிதர்களின் பேச்சு ஒலிகளின் அம்சங்களுக்கு மிகவும் நெருங்கி வருகின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.
மனிதர்கள் பேசும்போது தாடையும், உதடும் நாக்கும் ஒரே நேரத்தில் சேர்ந்து இயங்குவதைப்போலவே, கெலாடா குரங்குகள் ஒலியெழுப்பும்போது, அவற்றின் தாடைகளும், உதடுகளும், நாக்கும் ஒரே நேரத்தில் சேர்ந்து செயற்படுவதாகவும் இந்த ஆய்வை மேற்கொண்டோர் குறிப்பிட்டுள்ளனர். தங்கள் ஆய்வின் அடுத்தக் கட்டமாக,கெலாடா குரங்குகளின் ஒலிகளுக்குத் தனிப்பட்ட அர்த்தம் ஏதும் இருக்கிறதா என்பதை இக்குழுவினர் ஆராயவிருக்கிறார்கள்.
Subscribe to:
Posts (Atom)
