Thursday, February 28, 2013
Tuesday, February 26, 2013
திருத்தந்தை பணிஓய்வு நேரடி ஒளிபரப்பு
அன்பு நெஞ்சங்களே,
பிப்.26. 2013. திருத்தந்தை ஒருவர் பணிஓய்வு பெறுவது என்பது ஏறத்தாழ 600 ஆண்டுகளுக்குப்பின் தற்போது இடம்பெறுகிறது. இம்மாதம் 28ம் தேதி மாலை பணி ஓய்வுபெறும் நம் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், 27ம் தேதி புதனன்று உரோம் நகர் தூய பேதுரு வளாகத்தில் மக்களை இறுதிமுறையாகச் சந்திக்கிறார். 28ம் தேதி திரு அவையின் கர்தினால்களைச் சந்தித்து உரையாடியபின், அன்று மாலை 5 மணியளவில் தன் தலைமைப்பொறுப்பிலிருந்து விடைபெற்று திருத்தந்தையர்களின் காஸ்தெல் கந்தோல்ஃபோ கோடை விடுமுறை இல்லத்திற்குச் செல்கிறார். இந்த புதனும் வியாழனும் இடம்பெறும் திருத்தந்தையின் முக்கிய நிகழ்வுகளை நேரடியாக ஒலி-ஒளி வடிவில் உங்களுக்கு வழங்குகிறது வத்திக்கான் வானொலி. கீழேயுள்ள இணைப்பின் வழி உங்களுக்கு எம் நேரடி ஒளிபரப்பு வந்தடையும்.
நேரடி ஒளிபரப்பு நேரங்கள் –
பிப்ரவரி 27. புதன் - உரோம் நேரம் காலை 10.25 முதல் 12.00 வரை (இந்திய நேரம் மாலை 2.55 முதல் 4.30 வரை)
பிப்ரவரி 28. வியாழன் - உரோம் நேரம் மாலை 4.30 முதல் 6.30 வரை (இந்திய நேரம் இரவு 9.00 முதல் 11.00 வரை)
Tuesday, February 12, 2013
திருத்தந்தை அறிக்கை
பாப்பிறை பதவியிலிருந்து ஓய்வுபெறுவதற்கான விருப்பத்தை தெரிவித்து திருத்தந்தை அறிக்கை
பிப்.,2013. இம்மாதம் 28ம் தேதியிலிருந்து பாப்பிறை பதவியிலிருந்து ஓய்வுபெறுவதற்கான விருப்பத்தைத் தெரிவித்து இத்திங்களன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
முதுமை காரணமாக திருத்தந்தைக்குரிய பணிகளைச் சரியாக ஏற்று நடத்தமுடியாத நிலையில் இம்முடிவைத் தான் எடுத்துள்ளதாகக் கூறியுள்ள பாப்பிறை, 2005ம் ஆண்டு ஏப்ரல் 19ம் நாள் கர்தினால்கள் அவையால் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட இப்பொறுப்பிலிருந்து இம்மாதம் 28ம் தேதி உரோம் நேரம் இரவு 8 மணியிலிருந்து பணிஓய்வு பெறுவதாக அவ்வறிக்கையில் கூறியுள்ளார். அதன்பின் கர்தினால்கள் அவை கூடி புதிய திருத்தந்தையைத் தேர்ந்தடுக்கும் எனவும் அதில் தெரிவித்துள்ளார் பாப்பிறை.
இந்தப் பாப்பிறை பணியின்போது தன்மீது காட்டப்பட்ட அன்பிற்கு நன்றி கூறுவதாகவும்,குறைபாடுகளுக்காக மன்னிப்பை வேண்டுவதாகவும் மேலும் தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் பாப்பிறை. தன் இறுதிக் காலத்தில், செபத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு வாழ்வு மூலம் திருஅவைக்குச் சேவையாற்ற உள்ளதாகவும், தனது செய்தியின் இறுதியில் கூறியுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
Subscribe to:
Posts (Atom)