Thursday, March 14, 2013

புதியத் திருத்தந்தை முதலாம் பிரான்சிஸ் - 13.03.13


புதியத் திருத்தந்தை முதலாம் பிரான்சிஸ்
சிறப்புச் செய்திகள்
13.03.13


en_0313_specrpt_PizzeyOnNewPope_480x360


1. திருஅவையின் 266வது திருத்தந்தையாகப் பொறுப்பேற்கும் இயேசு சபை கர்தினால் Jorge Mario Bergoglio

மார்ச்,13,2013. 2013ம் ஆண்டுமார்ச் 13புதன் இரவு 8.12 மணிக்கு புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தின் மேல்மாடத்தில் தோன்றிய கர்தினால் Jean-Louis Tauran நாம் ஒரு திருத்தந்தையைப் பெற்றுள்ளோம் என்று அறிவித்தார்.
திருஅவையின் 266வது திருத்தந்தையாகப் பொறுப்பேற்கும் கர்தினால் Jorge Mario Bergoglio, முதலாம் பிரான்சிஸ் என்ற பெயரை ஏற்றுள்ளார்.
1936ம் ஆண்டு டிசம்பர் 17ம் தேதி Argentina நாட்டின் Buenos Aires நகரில் பிறந்தவர் Jorge Mario Bergoglioஐந்து குழந்தைகள் கொண்ட குடும்பத்தில் பிறந்த இவரது தந்தை இரயில் துறையில் பணிபுரிந்த ஓர் இத்தாலியர்.Jorge வேதியில் துறையில் பட்டம் பெற்றபின்1958ம் ஆண்டு தனது 22வது வயதில் இயேசு சபையில் சேர்ந்தார்.
தத்துவ இயலிலும்மனநல இயலிலும் முதுகலைப் பட்டங்கள் பெற்ற இவர்Buenos Airesல் உள்ள Colegio del Salvador என்ற கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினார்.
1969ம் ஆண்டு குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்ட Jorge, 1973ம் ஆண்டு முதல் 1979ம் ஆண்டு முடியArgentina இயேசு சபை மாநிலத்தின் தலைவராகப் பணியாற்றினார்.
1992ம் ஆண்டு Buenos Aires உயர் மறைமாவட்டத்தின் துணை ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்ட இவர்,1998ம் ஆண்டு முதல் அம்மறைமாவட்டத்தின் பேராயராகப் பொறுபேற்றார். திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் 2001ம் ஆண்டு இவரை கர்தினாலாக உயர்த்தினார்.
முதல் முறையாகதென் அமெரிக்கக் கண்டத்திலிருந்து ஒருவர் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இயேசு சபையின் ஆண்டுகள் வரலாற்றில் முதன் முறையாக ஒரு இயேசு சபை துறவி இந்நிலையை அடைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.


2. திருத்தந்தை முதலாம் பிரான்சிஸ் ஆற்றிய முதல் உரை

புதிய திருத்தந்தை முதலாம் பிரான்சிஸ் வத்திக்கான் பசிலிக்காவின் நடுமாடத்தில் தோன்றியவுடன் மக்கள் ஆரவாரித்தனர். அவர் திருத்தந்தையின் வெண்மை நிற உடையில் தோன்றிஅமைதியாக சிறிது நேரம் நின்று கொண்டிருந்தார். பின்னர்மனதிலிருந்து எழுந்த வார்த்தைகளை மக்களுடன் பகிர்ந்து கொண்டார்:அன்பு சகோதர சகோதரிகளேகான்கிளேவ் அவை உரோம் ஆயரைத் தரவேண்டிய கடமையைக் கொண்டிருந்தது. எனது சகோதர கர்தினால்கள் ஏறக்குறைய உலகின் எல்லைக்குச் சென்று தேர்ந்தெடுத்துள்ளதாகத் தெரிகிறது. ஆயினும் நாம் இங்கே இருக்கிறோம். உங்களின் வரவேற்புக்கு மிக்க நன்றி. உரோம் மறைமாவட்டம் தனது ஆயரைப் பெற்றுள்ளது. நமது முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுக்காக முதலில் செபிக்க விரும்புகிறேன். நம் ஆண்டவரும் அன்னை மரியாவும் அவரை ஆசீர்வதிக்குமாறு செபிப்போம்.
இவ்வாறு சொன்னபின்இயேசு சொல்லிக்கொடுத்த வானகத்தந்தையே என்ற செபத்தையும் அருள்நிறைந்த மரியே செபத்தையும் சொன்னார். இப்போது ஆயரும் மக்களும் சேர்ந்து நடக்கும் பயணத்தில்உரோம் திருஅவையின் பயணத்தில் பிறரன்பிலும் சகோதரத்துவத்திலும் நடப்போம். எப்போதும் ஒருவர் மற்றவருக்காகச் செபிப்போம். உலகுக்காகச் செபிப்போம். நான் உங்களுக்கு ஆசீர் கொடுக்க விரும்புகிறேன். அதற்கு முன்னதாகஇன்று உங்களிடம் ஒன்று கேட்கிறேன். முதலில் ஆயராகிய நான் உங்களை ஆசிர்வதிக்கும் முன்னர்ஆண்டவர் என்னை ஆசீர்வதிக்குமாறு நீங்கள் எனக்காகச் செபிக்குமாறு கேட்கிறேன்.
இவ்வாறு கூறிய திருத்தந்தை முதலாம் பிரான்சிஸ், சிறிதுநேரம் அமைதியாக தலைகவிழ்ந்து நின்று மக்களின் செப அலைகளை ஏற்றுக்கொண்டார்.  பின்னர் மக்களிடம்இப்போது உங்களுக்கும், உலகினர் அனைவருக்கும்நன்மனம் கொண்ட அனைத்து ஆண்களுக்கும் பெண்களுக்கும் எனது ஆசீரை அளிக்கிறேன் என்று சொல்லி   ஊருக்கும் உலகுக்குமான Urbi et Orbi” ஆசீரை அளித்தார்.
பின்னர் மீண்டும் உங்களின் வரவேற்புக்கு மிக்க நன்றி. எனக்காகச் செபியுங்கள். விரைவில் சந்திப்போம். நாளை அன்னைமரியாவிடம் சென்று செபிக்க விரும்புகிறேன். ஏனெனில் அவர் உரோமையைப் பாதுகாத்து வருகிறார். எல்லாருக்கும் நல்ல இரவு என்று சொல்லி மக்களிடமிருந்து விடைபெற்றார். மக்கள் தொடர்ந்துViva il Papa திருத்தந்தை வாழ்க என்று சப்தமாகச் சொல்லிபாடிக்கொண்டே இருந்தனர்.

No comments:

Post a Comment