Wednesday, October 30, 2013

ஒரே மரத்தில் 250 வகையான ஆப்பிள்கள்: ஜெர்மனியில் சாதனை


ஒரே மரத்தில் 250 வகையான ஆப்பிள்களை காய்க்க செய்யும் வினோத மரத்தை வளர்த்து, ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த தோட்டக்கலைஞர் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.
ஜெர்மனியின் West Sussex பகுதியில் உள்ள Chidham என்ற ஊரைச் சேர்ந்த Paul Barnett என்ற தோட்டக்கலைஞர், 250 வகையான ஆப்பிள்கள் காய்க்கும் வினோத மரம் ஒன்றை தனது தோட்டத்தில் வளர்த்துள்ளார்.
கடந்த 20 வருடங்களாக மிகவும் கவனத்தோடு பல்வேறு வகை ஆப்பிள் மரங்களின் ஒட்டு ரகங்களை வைத்து தனது ஆப்பிள் மரத்தை வளர்த்து வருவதாக Paul Barnett கூறியுள்ளார்.
தற்போது 20 அடி உயரம் வளர்ந்துள்ள இந்த ஆப்பிள் மரத்தில், சமையலுக்கு பயன்படும் Withington Fillbasketஎனப்படும் அமெரிக்க ஆப்பிள் முதல், 1908ம் ஆண்டைச் சேர்ந்த Eady’s Magnum போன்ற பல்வேறு வகைகளும் காய்ப்பதாக Paul Barnett பெருமையுடன் தெரிவித்துள்ளார்.
இவரது மரத்தில் காய்க்கும் ஆப்பிள்களை பொதுமக்கள் வந்து ஆர்வத்துடன் பார்த்து, வாங்கி, சுவைத்து நன்றாக இருப்பதாக பாராட்டுகின்றனர். இந்த மரம் தற்போது ஜெர்மனியில் புகழடைந்து வருகிறது.

காது கேளாதோர் தினம்

காது கேளாதோர் தினம்

ஒலியைக் கேட்பதில் சிரமம் ஏற்படுவதையே காது கேளாமை என்று சொல்கிறோம். உலக மக்கள் தொகையில் 5 விழுக்காட்டுக்கு அதிகமானோர், அதாவது ஏறக்குறைய 36 கோடிப் பேர் காது கேளாதவர்கள். இவர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் வளரும் நாடுகளில் உள்ளனர் எனவும், ஆரம்பத்திலே சிகிச்சை எடுத்துக்கொள்வதன்மூலம் இவர்களில் பாதிப்பேரைக் குணப்படுத்திவிடலாம் எனவும் உலக நலவாழ்வு நிறுவனம் கூறுகிறது. உலகில் ஏறக்குறைய 40  விழுக்காட்டினருக்குத் தங்களின் 65வது வயதில் காது கேளாமை பிரச்சனை ஏற்படுகிறது. மனிதரது காது, சாதாரணமாக 20 ஹெர்ட்ஸிலிருந்து 20 கிலோ ஹெர்ட்ஸ்வரை கேட்கும் திறன் பெற்றது. அதிக ஒலியைக் கேட்பதால்கூட கேட்கும் திறன் பாதிக்கப்படுகிறது. பெற்றோருக்கு இக்குறைபாடு இருப்பின்,குழந்தையையும் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. அடிக்கடி சளி அல்லது தொண்டைவலி ஏற்பட்டாலும் காது கேட்காமல் போகலாம். குழந்தைகளுக்கு காது கேளாமை இருந்தால் உடனே மருத்துவரிடம் சென்று பரிசோதிக்க வேண்டும். இல்லையெனில் இது குழந்தையின் பேச்சுத்திறனையும் பாதிக்கும். கைபேசியின் கதிர்வீச்சு காரணமாகக்கூட கேட்கும் திறன் பாதிப்படைகிறது. காதில் அழுக்கைச் சுத்தம் செய்கிறோம் என்ற பேரில் கண்ட கண்ட குச்சியைப் பயன்படுத்துவது, காதின் கேட்கும் திறனைப் பாதிக்கும்.
1951ம் ஆண்டு செப்டம்பரில், முதல் அனைத்துலக காது கேளாதோர் மாநாடு நடத்தப்பட்டது. 1958ம் ஆண்டில் அனைத்துலக காது கேளாதோர் தினம் தொடங்கப்பட்டது. பின் இது செப்டம்பர் கடைசி வாரம் காது கேளாதோர் வாரமாகவும், செப்டம்பர் கடைசி ஞாயிறு அனைத்துலக காது கேளாதோர் தினமாகவும் மாற்றப்பட்டது.
காது கேளாதோரிடம் பேசும்போது கவனிக்க வேண்டியவை.....
காது கேட்கவில்லை என்ற உணர்வை அவர்களுக்கு ஒருபோதும் ஏற்படுத்தக் கூடாது. “இதை அல்லது அதை எப்படிச் செய்தாய்” போன்ற வார்த்தைகளை அவர்களிடம் கேட்கக் கூடாது.
அவர்களுக்கு வணக்கம் சொல்லும்பொழுது கைகளைக் குலுக்காமல் மெதுவாக அணைத்துச் சொல்வது நல்லது.
நாம் உணருவதை அவர்கள் புரிந்துகொள்ளும் வகையில் சில அடிப்படையான சைகை மொழியைத் தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது.
காது கேளாதோர்க்கு சரிநிகர் மரியாதையும் மதிப்பும் கொடுக்க வேண்டும். மற்ற மக்கள் மத்தியில் அவர்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

ஒரே செடியில் தக்காளி, உருளைக் கிழங்கு, பிரிட்டன் நிறுவனம் சாதனை

 ஒரே செடியில் தக்காளியும், உருளைக்கிழங்கும் விளையும் நவீன முறையைக் கண்டுபிடித்து பிரிட்டனை சேர்ந்த நிறுவனம் ஒன்று சாதனை படைத்துள்ளது.
பிரிட்டனைச் சேர்ந்த Thompson & Morgan என்ற நிறுவனம் வேளாண்மையில் புதுமைகளைப் புகுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக ஒரே செடியில் இரு வேறு காய்களை விளைவிக்கும் நவீன யுக்தியை இந்நிறுவனம் கையாண்டு அதில் வெற்றியும் பெற்றுள்ளது. அதன்படி உருளைக்கிழங்கையும், தக்காளியையும் ஒரே செடியில் விளைவித்து அறுவடையும் செய்துள்ளது.
இது குறித்துப் பேசிய அந்நிறுவன தலைவர் பவுல் ஹான்சர்டு (Paul Hansord) இரு வெவ்வேறு காய்கறிகளை ஒரே செடியில் விளைவிப்பது மிகவும் கடினமான காரியம் என்று கூறினார்.
மரபியல் மாற்றங்களைச் செய்து இதற்குமுன் இது போன்ற செயல்களில் அறிவியலாளர்கள் வெற்றி கண்டுள்ளனர், எனினும் அவ்வகையான மாற்றங்கள் செய்யாமல், இயற்கையான முறையில் இரு செடிகளை இணைத்து அவற்றில் விளையும் காய்கறிகளை, ஒரே செடியில் முதல் முறையாகத் தற்போது விளைவித்துள்ளோம் என்றும் ஹான்சர்டு கூறினார்.
இரு தாவரங்களின் திசுக்களையும் பிரித்து ஒரு குறிப்பிட்ட நிலைக்குப் பின் இரண்டும் ஒன்றாக ஒரே தொட்டியில் வளர்க்கப்பட்டன. அதன்பின் சரியான நேரத்தில் தக்காளிகள் காய்க்கத் துவங்கின, வேர்ப்பகுதியில் உருளைக்கிழங்கும் முளைத்திருந்தது. சோதனை முறையில் மட்டுமின்றி வியாபார ரீதியாகவும் இந்த முயற்சி வெற்றி பெற்றுள்ளது.
இதில் விளையும் காய்கறிகள் மிகுந்த சுவையுடன் இருப்பதால் மக்கள் விரும்பி வாங்கிச் செல்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
பிரிட்டனில் கண்டறியப்பட்ட இந்த முறையை தற்போது நியூசிலாந்து விவசாயிகளும் பின்பற்றத் தொடங்கியுள்ளனர்.

Thursday, October 24, 2013

காப்புக்காடு அருகே வாகனம் மோதி முதியவர் பலி

காப்புக்காடு அருகே மட்டுபாவு ஜங்ஷன்-ல் இருசக்கர வாகனம் மோதி முதியவர் ஒருவர் பலியானர். விபத்து நடந்த நேரம்: 24/10/2013 9.30 PM

Thursday, September 26, 2013

ஜப்பான் மக்களைப்பற்றி...

ஜப்பான் மக்கள் என்று சொன்னதும் மனதில் அவர்களைக் குறித்த ஒரு மரியாதை உருவாகிறது. இதற்குக் காரணம்... நிலநடுக்கம், சுனாமி, எரிமலை வெடிப்பு போன்ற இயற்கையின் விளைவுகளைச் சந்திக்கும்போதும்,அணுகுண்டு போன்ற மனித எதிர்ப்புக்களைச் சந்திக்கும்போதும் இவர்கள் காட்டும் கட்டுப்பாடும், ஒழுங்கும் நம்மைப் பிரமிக்க வைக்கின்றன.
ஜப்பான் மக்கள் என்றதும் அடுத்து நம் கவனத்தை ஈர்ப்பது அந்நாட்டிலுள்ள வயது முதிர்ந்தோரின் எண்ணிக்கை. அந்நாட்டின் மக்கள் தொகையில் வயது முதிர்ந்தோரின் எண்ணிக்கை 21 விழுக்காட்டிற்கும் அதிகம். வயது முதிர்ந்தோர் எண்ணிக்கை விழுக்காட்டில் ஜப்பான் உலக நாடுகளில் முதலிடம் வகிக்கிறது.
தற்போது ஜப்பானில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து, வயது முதிர்ந்தோரின் எண்ணிக்கை கூடிவரும் நிலை காணப்படுகிறது. இதே நிலை தொடர்ந்து நீடித்தால், 2050ம் ஆண்டுக்குள் ஜப்பானில் வயது முதிர்ந்தோர் எண்ணிக்கை, நாட்டு மக்கள் தொகையில் 40.5 விழுக்காடாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அமெரிக்காவில் வாழும் மக்களின் சராசரி வாழ்நாள் அளவுடன் ஒப்பிட்டால், ஜப்பான் மக்களின் வாழ்நாள், பொதுவாக 4 ஆண்டுகள் கூடுதலாக உள்ளது.
ஜப்பான் மக்களிடையே ஏறத்தாழ 100 விழுக்காட்டினர் எழுத, படிக்கத் தெரிந்தவர்கள். இந்நாட்டில் 4 விழுக்காட்டிற்கும் குறைவானவர்களே வேலையற்றோர் எண்ணிக்கையில் உள்ளனர்.
ஜப்பானில் உள்ள பல தொழிற்சாலைகளில் காலையில் தொழிலாளிகள் வந்து சேர்ந்ததும், அவர்களுக்கு உடற்பயிற்சிகள் நேரம் ஒதுக்கப்படுகிறது. இவர்கள் செய்யும் உடற்பயிற்சிகளில் மனதை ஒருநிலைப்படுத்தும் பயிற்சிகளும் இணைந்து செய்யப்படுகின்றன.

இணையத்தில், மகிழ்வைவிட கோபம் தான் மிக வேகமாகப் பரவும் மனித உணர்வு - சீன ஆய்வு

 உலகை ஒன்றாக இணைத்திருப்பதன் மூலம் தகவல் தொழில்நுட்பப் புரட்சியை ஏற்படுத்தியிருக்கும் இணையத்தில், கோபம் தான் மிக வேகமாகப் பரவும் மனித உணர்வு என்று சீனாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
மனிதர்கள் வாழ்வுடன் வெகுவாக ஒன்றிப்போயிருக்கும் ஒரு சமூக இணையதளம் Twitter. குறிப்பிட்ட ஒரு விடயத்தைப் பற்றி, மக்கள் தூண்டப்பட்டதும், தமது கருத்துக்களை அவர்கள் Twitter வழியே பதிந்து விடுகிறார்கள்.
ஒரு குறிப்பிட்ட விவகாரம் குறித்து பொதுமக்கள் என்ன நினைக்கிறார்கள், அவர்கள் மத்தியில் என்ன கருத்துகள் நிலவுகின்றன என்பதை அறிய விரும்பும் ஆய்வாளர்கள், முதலில் நாடுவது Twitter போன்ற இணையதளங்களைத்தான்.
இப்படிபட்ட சமூக இணையதளங்களில் ஒன்று, சீனாவில் அதிகம் பயன்படுத்தப்படும் Weibo. Twitterக்கு இணையான Weiboவை சீனாவில் 50 கோடி மக்கள் பயன்படுத்துகிறார்கள்.
10 கோடி கருத்துகள் தினமும் பதிவாகும் Weibo இணையதளம் பற்றி, தலைநகர் Beijingகிலுள்ள Beihangபல்கலைகழகம் நடத்திய ஆய்வில் சில சுவையான தகவல்கள் வெளியாகியுள்ளன.
Weibo பயனீட்டாளர்களின் சொற்பிரயோகம், உணர்வுகளை வெளிப்படுத்தும் emoticon எனப்படும் அடையாளப் பயன்பாடு ஆகியவற்றை ஆய்வு செய்தவர்கள், கோபம், சோகம், மகிழ்வு, விரக்தி ஆகிய உணர்வுகளில்,கோபமூட்டும் பதிவுகளே மக்கள் மத்தியில் அதிக அளவில் பகிர்ந்து கொள்ளப்பட்டதைக் கண்டறிந்தனர்.
2010ம் ஆண்டில் ஆறு மாத காலம் சுமார் இரண்டு இலட்சம் Weibo பயனீட்டாளர்களின் ஏழு கோடி பதிவுகள் ஆய்வுசெய்யப்பட்டு இந்த முடிவுகள் வெளியிடப்பட்டன.

Wednesday, September 18, 2013

தொல்காப்பியர் சாலை, காப்புக்காடு

காப்புக்காடு கல்லறை தோட்டத்திலிருந்து நீரூற்று வரை புதிதாக அமைக்கப்பட்ட சாலைக்கு தொல்காப்பியர் சாலை என்று பெயரிட நல்லூர் பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவற்றியதற்கு நன்றி தெரிவித்து தொல்காப்பியர் கழகம் சார்பில் சால்வை அணிவிக்கப்பட்டது.

தொல்காப்பியர் கழகம் சார்பில் தலைவர் முளங்குழி பா. லாசர் அவர்கள் நல்லூர் பேரூராட்சி தலைவர் திரு கே செல்வராஜ் அவர்களுக்கு சால்வை அணிவித்தார்



தொல்காப்பியர் கழகம் சார்பில் தலைவர் முளங்குழி பா. லாசர் அவர்கள் 6 வது வார்டு உறுப்பினர் திரு. கிறிஸ்டோபர் அவர்களுக்கு சால்வை அணிவித்தார்






நல்லூர் பேரூராட்சி தலைவர் அவர்கள்  தொல்காப்பியர் சாலை என்று பெயரிட்ட தீர்மான நகலை தொல்காப்பியர் கழக நிர்வாகிகளுக்கு வழங்குகிறார்
தொல்காப்பியர் சாலை என்று பெயரிட நல்லூர் பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம்



தொல்காப்பியர் கழகம் சார்பில் தலைவர் முளங்குழி பா. லாசர் அவர்கள் நல்லூர் பேரூராட்சி செயல் அலுவலருக்கு சால்வை அணிவித்தார்



தொல்காப்பியர் கழகம் சார்பில் நல்லூர் பேரூராட்சி செயல் அலுவலருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது